பக்கம்:முருகன் காட்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நக்கீரர் காட்டும் முருகன்

நூலின் அமைப்பு

திருமுருகு என்ற சொற்றொடர் தி ரு மு. ரு க ப் பெருமானை உணர்த்தும். அழகு, இளமை, மனம் இப் பண்புகளுக்கெல்லாம் உறைவிடமாகத் திகழ்பவன் முருகன் ஆவன். ஆற்றுப்படை என்ற சொற்றொடர் வழிப்படுத்து வது அல்லது வழிகாட்டுவது என்ற பொருளைப் பயக்கும். (ஆறு = வழி; படை-படுத்துவது). முருகப் பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தவங்களுக்குச் சென்று, அப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றான் ஒருவன். அப்பெருமான் தன் அருள் வேண்டி நின்றான் ஒருவனுக்கு அவ்விடங்களைக் கூறி, அருள் முருகனின் பேரருட் பெருக்கினையும், திருமேனிப் பொலிவினையும் பொருந்தக் கூறி, ஆற்றுப்படுத்தி அனுப்புவதாக-வழி. காட்டி அனுப்புவதாக, அமைந்த நூலே திருமுருகாற்றுப்

படையாகும்.

இது தொல்காப்பியம் புறத்தினையியலுள். தாவி ணல்ல சை” என்னும் சூத்திரத்துள்,

கூத்தரும் பாணரும் பொருங்ரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்.

-தொல்காப்பியம்: புறத்தினை இயல்: 36

என்ற பகுதி உளது. அதுவே ஆற்றுப்படையின் அடிப் படையாகின்றது. ஆனால் மற்ற ஆற்றுப் படைகள் போலல்லாமல் திருமுருகாற்றுப்படை ஆற்றுப் படுக்கப் பட்டாராற் பெயர் பெறாமல், நூலின் பாட்டுடைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/32&oldid=585913" இலிருந்து மீள்விக்கப்பட்டது