32 முருன்க காட்சி
மங்கல வாழ்த்துக் காதையில் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற் கோட்டு மேருவலந் திரிதலான் என்று பாராட்டினார். தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்றும் t-IAD விருளைப் போக்கும் ஞாயிற்றையும் அகவிருள் பரப்பப் பாடுபடும் தமிழையும்,
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலி நீர் ஞாலத் திருள கற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் ரேனையது தன்னே ரிலாத தமிழ் என்று ஒப்பப் போற்றுகின்றது.
மகாகவி பாரதியாரும் இளையபாரதத்தினாய்” என்ற பாடலில் உதய ஞாயிறொப்பவே வாவாவா என்று பாடியுள்ளார். எங்கிருந்தாலும் நெருஞ்சிமுள் சூரியணையே நோக்கியிருக்கும். இதனைத் தலைவி ஒர் உவமையாக எண்ணி,
எழுதரு மதியங் கடற்கண் டாஅங் கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன் ஞாயி றனையன் தோழி நெருஞ்சி யனையவென் பெரும்பனைத் தோனே.
--குறுந்தொகை: 315 என்று பாடுகின்றாள்.
இவ்வாறு உலகுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும் கதிரவனை முதற்கண் புகழ்கின்றார் நக்கீரர். எங்கணும் விரிந்து ஒளியுமிழும் ஞாயிறு நீல நிறக் கடலின் மேல் கிளர்ந்தெழுதல் போன்று திருமுருகனும் அவிரும் ஒளியை உடையவனாய் நீலமயில் மீது கோலங்கொண்ட மேனி யனாய்த் துரத்தே தோன்றி ஒளிர்கின்றான்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு ஒவற விமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி,
-திருமுருகு: 1-3.