பக்கம்:முருகன் காட்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 33

தன்னை அடைக்கலம் என்று அண்டி அருள் வேண்டி வந்த அடியார்களின் மனமாசுகளைப் போக்கி, என்றும் அழியாத வீட்டின்பத்தினை நல்கித் தாங்கும், அழகும் அருளும் வலிமையும் போன்ற திருவடிகளையுடையவன் முருகப் பெருமான். இவ்வாறு காத்தற்குரியாரைக் காக்கும் தொழிலைச் செய்பவன் அழித்தற்குரியாமை அழிக்கும் செயலையும் இடையறாது உலகம் உய்யும் பொருட்டுச் செய்துகொண்டுள்ளான். திருவருளுக்குப் பகைவர்களாகி அறமல்லாத தகாதன செய்யும் கொடி பவர் தம் அறியாமை இருள் மண்டிக் கிடக்கும் ஆணவத்தை அழித்து பெய்யவேண்டிய காலத்தே பெய்து, வளஞ் சுரக்கும் மழையைப் போலத் திருவருள் மழை பொழிந்து அவர்களை அவ் வழியினின்று நீக்கி நல்வழி சேர்த்துக் காப்பாற்றுகின்ற கருணை சான்ற பெரிய கைகளையுடை யவன் அவன். குற்றமற்ற கற்பினைக் கொண்டொளிரும் தெய்வ யானை அம்மையார்க்குக் கணவன் திருமுருகன்:

உறுநர்த் தாங்கிய மதனுடைய நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன்.

-திருமுருகு, 4-6

பின்னர், புலவர் பெருமான் நக்கீரனார் இயற்கையின் இனிய திருக்கோலத்தை இனிமையுற எடுத்து மொழி கின்றார். கடல் நீரைக் குடித்து அதனால் கருக்கொண்ட பெரிய மேகம் மின்னல் ஒளி வீசிக் கண்னைப் பறிக்கும் விண்ணிலே நிரம்பிய மழைநீர்த் துளிகளை எங்கணும் பரப்பியது; அது கார்கால மழையை, முதல் மழையைப் பொழிந்தது, கார்கால மழையின் தலையளியால் காடு குளிர்ந்து அதனால் காட்டு மரங்கள் தழைத்துத் களிர்த்துப் பூத்து மணம் பரப்பின. அக் காட்டின் இடையே இருள் மண்டிக் கிளை தழைத்துப் பரந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/35&oldid=585916" இலிருந்து மீள்விக்கப்பட்டது