பக்கம்:முருகன் காட்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. முருகன் காட்சி

பெரிய -Յ1ւգ- மரத்தையுடைய செங்கடப்ப மரம் தேருருளை போன்ற பூக்களைப் பூத்து நின்றது. அ’ பூக்களாற் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவன் திரு முருகன் ஆவன்.

கார்கோள் முகந்த கமஞ் சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்

தலைப்பெயல் தலைஇய தண்ணறும் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மரா அத்து

உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்.

-திருமுருகு ; 7-11

பெரிய வளவிய மூங்கில்கள் வானளாவி வளர்ந்திருக் கின்றன. மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் மலை யிடத்தே சிறு சதங்கை அணிந்த ஒளி நிழற்றும் அடியினை யும், திரண்ட காலினையும், வளைந்த இடையினையும், மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடையராய்ச் சூரர மகளிர் வாழ்கின்றனர். அவர்கள் இந்திர கோபப் பூச்சி களைப் போன்று சாயம் ஏற்றாமலே இயல்பாகவே செந்நிறம் வாய்ந்த அழகிய ஆடைகளை அணிந்துள்ளனர். பல பொற்காசுகளை வரிசையாகக் கோத்த ஏழு வடமான மேகலை என்னும் அணியினை அணிந்த இடையினை உடை யராய் உள்ளனர். ஒருவர் கையால் ஒப்பனை செய்து தோற்றவிக்கப் பெறாது இயல்பாகவே பெற்ற அழகினை யும், நாவல் (சம்பூநதம்) என்ற நற் சொல்லாற் பெயர் பெற்ற பொன்னினாலே செய்யப்பெற்று விளங்குகின்ற அணிகலன்களையும் கட்குப் புலனாகும் எல்லையினையும் கடந்து சென்று ஒளிவீசும் குற்றமற்ற நிறத்தினராயும் உள்ளனர் சூரர மகளிர்:

மால்வரை கிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பனைத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/36&oldid=585917" இலிருந்து மீள்விக்கப்பட்டது