பக்கம்:முருகன் காட்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முருகன் காட்சி

றுள்ள நகையின் பிளந்த வாய் தாழ்ந்து படும்படி அமைத்து அழகு மேலும் விளக்கம் பெறச் செய்துள்ளார்கள். இத்தெய்வவுத்தி என்னும் தலைக்கோலத்திற்கு விளக்க மாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்: சிலப்பதிகார உ ைர யி ல் குறிப்பிடுவன வருமாறு: சீதேவியார் என்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும், பூரப்பாளையும், தென்பல்லி வடபல்லியென்னும் இவையும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலம்’ என்ப தாகும்.

நன்கு முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகி உள்ளனர். செண்பகப் பூவின்மேலே கரிய புறவிதழினையும் அகத்தே துய்யினையும் உடைய பூக்களை மிகுதியாகக் கொண்ட மருதப் பூங்கொத்துகளை இட்டுள்ளனர். இவற்றிற்கும் மேலே கிளையிடத்து அழகுபெற வளர்கின்றனவும், சாய்ந்து நீரின் கீழிடத்து இருப்பனவும் ஆகிய செந்நித அரும்புகளால் இணைத்து ஒபபக் கட்டிய மாலையைக் கொண்டையிலே சூழச் சுற்றியுள்ளனர்.

துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் செங்கால் வெட்சிச் சிறிதழ் இடையிடுபு பைங்தாட் குவளைத் துTவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின் வைத்துத் திலகங் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளினர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு

ഞങ്ങ്l-l பிணையல் வளைஇ. இ L1s). இ --திருமுருகு: 20-36 தளிரையும் மலரையும் காதிலே செருகிக் கொள்வது பண்டைய மரபு. தளிருக்குக் குழை என்ற பெயரும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/38&oldid=585919" இலிருந்து மீள்விக்கப்பட்டது