பக்கம்:முருகன் காட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 37

தளிர்சூடிய வழக்கம் அற்றுப்போய்ப் பொன்னணி வந்த இப்பொழுதும் காதணி குழை’ என்றே வழங்கப் பெறுவது தளிரின் சிறப்புணர்த்தும். தளிர் மிக மென்மை யானது, குழைவு மிகவுடைத்து. எனவேதான் தளிர்வு மிகவுடைய தழைந்த செயலைக் குழைந்தான்’ என்று இப்பொழுதும் கூறுகின்றோம்.

சூரர மகளிர் சிவந்த அசோகத் தளிரினைத் தங்கள் காதுகளிலே செறித்துள்ளனர். துண்ணிய வேலைப்பாடு அமைந்த அணிகலன்கள் அவர்கள் மார்பில் அழகுற அசை கின்றன. திட்பமும் வைரத்தன்மையும் நறுமண நாற்றமும் பொருந்திய சந்தனக் கட்டையை உரைத்து, அதனால் உண்டாகிய வண்ணமும் வனப்பும் உடைய சத்தனக் குழம்பை நன்மணம் கமழும் மருதப் பூங்கொத்தை வாரி அப்பினாற் போல, கோங்கினது குவிந்த அரும்பு போன்ற தம் இளமையான மார்பின் மேலே கொட்டியிருக் கின்றார்கள். அந்தச் சந்தனத்தின் ஈரம் புலவர் தம் முன்னே விரிந்த வேங்கை மலரில் உள்ள நுண்ணிய மகரந்தப் பொடியை அதன் மேலே அப்பியதனோடு அமையாது, மேலும் அழகு செய்யவேண்டி விளாமரத்தின் சிறிய .ெ கா ழு ந் து க ைள க் கிள்ளி அதன் மேலே சிதறிக் கொண்டார்கள்.

இவ் வண்ணம் தங்களைப் பல்லாற்றானும் ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் கோழியின் உருவத்தை தன் னிடத்தே கொண்டு உயர்ந்து, வஞ்சியாது எதிர் நின்று வென்று கொள்கின்ற வெற்றியையுடைய கொடி நீண்ட காலம் வாழ்வதாக என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரித்து வாழ்த்தி, சீர்மை விளங்கும் மலையிடமெல்லாம் எதிரொலி செய்யுமாறு ஏற்றிப் போற்றிப் பாடி வண்ணச் சோலையில் விளையாடி மகிழ்கின்றனர்.

மரமேறுதல் தொழிலில் வல்ல மந்தியும் ஏறமுடியாத உயர்ச்சியினையுடைய மரங்கள் நெருங்கி நிறைந்த பக்க மலையில், வண்டுகளும் மொய்த்தலில்லாத தெய்வத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/39&oldid=585920" இலிருந்து மீள்விக்கப்பட்டது