பக்கம்:முருகன் காட்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முருகன் காட்சி

தன்மை வாய்ந்த நெருப்புப் போலும் பூவினையுடைய செங்காந்தள் மலரின் பெரிய குளிர்ந்த கண்ணியை விரும்பிச் சூடிய திருமுடியினை யுடையவன் திருமுருகன் ஆவன்.

இவ்வாறு இப்பகுதியில் சூரரமகளிர் தம் செயல்களும் விளையாட்டும் முருகன் விரும்பி அணியும் அடையாளப் பூமாலையாம் காந்தளங் கண்ணியும் சிறப்புற வருணிக்கப் டிசிட்டுள்ளன.

து துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் துண்பூண் ஆகம் திளைப்பத் திண் காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

- திருமுருகு : 30:44,

சேவடி படரும் செம்மல் உள்ளம்

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்று தமிழ்க்குடியின் பழமை யினைப் பாராட்டிப் பேசுகிறது புறப்பொருள் வெண்பா மாலை. சூரியனிடமிருந்து தெறித்து விழுந்த ஒர் பிழம்புத் துண்டம் பின்னர் மெல்ல மெல்ல இறுகிக் குளிர்ந்து மலை ஆயிற்று என்பர் நிலஇயல் வல்லுநர். மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றியது கடல் என்பர். எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/40&oldid=585922" இலிருந்து மீள்விக்கப்பட்டது