பக்கம்:முருகன் காட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 4.3

கற்றதனா லாய பயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின் -திருக்குறள் : 2

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் -திருக்குறள் : 3

வேண்டுதல் வேண்டாமை யிலான டி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல -திருக்குறள் : 4 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது -திருக்குறள் : 7

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது -திருக்குறன் . 8

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை -திருக்குறள் : 9

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் -திருக்குறள் : 10

இவ்வாறு பத்துக் குறட்பாக்களில் ஏழு குறட்பாக்கள் இறைவன் அடியினை அடைய வேண்டுவதன் இன்றியமை யாமை குறித்துப் பேசுகின்றன. திருமுருகாற்றுப்படையின் இந்த அடிக்கு (62) நச்சினார்க்கினியர் உரையெழுதுகின்ற பொழுது, திருவடியிற் செல்லுவதற்குக் காரணமான நல்வினைகளைப் பல பிறப்புக்களிலும் விரும்பி நிகழ்த்தின கோட்பாட்டானே தலைமையினை யுடைத்தாகிய உள்ளத் தோட என்று எழுதி, மேலும் திருவடியே வீடாயிருக்கு மென்றார்; அது தென்னன் பெருந்துறையான், காட்டா

ஆனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/45&oldid=585927" இலிருந்து மீள்விக்கப்பட்டது