பக்கம்:முருகன் காட்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. முருகன் காட்சி

தன் கருணைத் தேன் காட்டி (திருவா. திருவம்மானை, 6) என்பதனாலும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றாணு முணர்க. என்று எழுதிப் போந்தார்.

என்கடன் பணிசெய்து கிடப்பதே எனப் பெருந். தொண்டு வாழ்வு நடாத்திய சைவப் பெருந்தகையாம் திருநாவுக்கரசர் பெருமானும்,

புண்ணியனே கின்னடிக்கே போதுகின்றேன்

பூம்புகலூர் மேவிய புண் ணியனே

என்றும்,

  • இறுமாந்திருப்பன் கொலோ

ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமானேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு

இறுமாந்திருப்பன் கொலோ

என்றும் இறைவன் சேவடியினைப் பரவி வணங்குகின்றார்.

அடியிற் காட்டப்பெறும் இலக்கியப் பகுதிகள் சேவடி படரும் செம்மல் உள்ளத்தினையே நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

அறவியங் கிழவோன் அடியிணை யாகிய

பிறவி யென்னும் பெருங்கடல் விடுஉம்

அறவி நாவாய் ஆங்குள தாதலின்

-மணிமேகலை : 11, 23.25

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன

ஒண்மலர்த்தாள் -திருவாசகம் : 43.

கற்றாங்கு அவன் கழல் பேணினர் -திருவாசகம் : 508.

க . ...கவைசெய் பிறவிக் கடலகத்துள் பாதகமலங் தொழுவேங்கள்

பசையாப்பவிழப் பணியாயே

-சீவகசிந்தாமணி ; 1242

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/46&oldid=585928" இலிருந்து மீள்விக்கப்பட்டது