தவத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வழங்கியருளிய
அனிேந்துரைஆ
‘ஒம்” என்ற குடிலையே எல்லா வேதங்களுக்கும், எல்லா எழுத்துகளுக்கும், எல்லா ஒசைகளுக்கும் பிறப் பிடம்; காசியம்பதியில் மரிப்பவர் செவியில் சிவபெருமான் கூறும் மந்திரமும் அதுவே யாகும். இதனைத் தாரகம் என்று கூறுவர். பிறவிப் பெருங்கடலைத் தாண்டச் செய்வதனால் தாரகம் எனப்படும்.
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும் வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க் காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான் எனவரும் கந்தபுராணத் திருவிருத்தத்தால் உணர்க.
இ உ ம என்ற மூன்றெழுத்தின் சேர்க் கையே ஓங்கார மாகும்.
அ-படைத்தல் உ-காத்தல் ம-ஒடுக்கல் என்ற முத்தொழிலுக்கும் மூலகாரணம் ஒங்காரம். இந்த அகர உகர மகரம் என்ற மூன்றெழுத்தின் இடை யில் உள்ள உகரம் நளிை சிறந்தது. உ” நடுநாயகமாக விளங்குகின்றது. இந்த உகரமே எல்லா வுலகங்களையும் எல்லா வுயிர்களையுங் காப்பாற்றுகின்றது.
அ உ ம என்ற முறை, உ ம அ என்று மாறுகின்றபோது உமா என்று ஆகின்றது. காக்கும் பராசக்தியைக் குறிக் கின்றது.
திருத்தொண்டர்களைக் காக்கும் அருட்சரிதைகளைக் கூறவந்த திருத்தொண்டர் புராணம் ‘உ’ என்ற எழுத்தை