52 ‘முருகன் காட்சி
கொண்டிருக்கும் குன்று திருமுருகன் விரும்பி உறையும்
திருப்பரங்குன்றாகும்: -
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைத் கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன். -
-திருமுருகு 72.77 ஆறுமுகமும் பன்னி ரு கையும்
அஞ்சிறை வண்டுக் கூட்டங்கள் ஒலிக்கும் திருப்பரங் குன்றி லன்றியும் பல்வேறு இடங்களிலும் திருமுருகன் கோயில் கொண்டுள்ளான். கூரிய நுனியுடைய தோட்டி வெட்டிவெட்டி வெட்டுத் தழும்பு ஆழ்ந்திருக்கின்ற செம்புள்ளி கரும்புள்ளிகளையுடைய யானையின் நெற்றியில் பொன்னரி மாலை பட்டத்தோடு கிடந்து அசைகின்றது. யானையின்மேல் இரண்டு பக்கங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கின்ற மணிகள் மாறிமாறி ஒலிக்கின்றன. வேகமான நடையினையும், இயமனைப்போல வலியினையும் காற்றுப் போல விரைந்த செலவினையும் உடைய யானையின்மேல் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றான்.
தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்ற ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய, முடிக்குச் செய் யும் தொழிலெல்லாம் செய்து முற்றுப்பெற்ற முடியோடு கூடி விளங்கிய மின்னல் ஒளிக்கு இயைந்த மாணிக்கக் கற்கள் முடியில் தங்கி ஒளிவீச, பலவகைத் தொழிற் கூறுபாடுகள் அமைந்த பொன்னாலான மகரக்குழைகள் ஒளியுமிழும் சந்திரனைச் சூழ்ந்து விளங்கும் விண்மீன்கள் போல ஒளிவீசித் திக pா நிற்ப, குற்றமற்ற தவத் தொழிலில் தலைப்பட்டு அதனைச் செவ்வனே முடித் தோருடைய துரய உள்ளத்தே பொருந்தித் தோன்றும்