பக்கம்:முருகன் காட்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 53

அளியும் நிறமும் உடைய திருமுகங்கள் முருகனின்

அறுமுகங்களாகும். *

அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின்’ என மலர்மிசை ஏகினான் என்னும் குறட்பாவினுக்குப் பொருள் விரித்தார் பரிமேலழகர். நக்கீரனாரும் அன்ப ருடைய உள்ளத்தே அறுமுருகன் ஒளிப்பொருளாகவே தோன்றுவான் என்பதனை விளக்கவே மனன் நேர்பு ாழுதரு வாள்நிற முகனே என்றார். இதனையே சிவஞான விதியாரும்,

இறைஞானங் தந்து தாளிதல் சுடரிழந்த

துங்கவிழிச் சோதியும் உட்சோதியும் பெற்றாற்போல் சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே என்று குறிப்பிடுகின்றது.

இனி, ஆறுமுகங்களின் செயல்களை முறையே குறிப் பிடுகின்றார் நக்கீரர். -- -

பேரிருளாலே போர்த்து மறைக்கப்பட்ட உலகம் அவ்விருட் குற்றம் சிறிதளவும் இல்லாமல் விளங்கும் பொருட்டுப் பலவாகிய ஒளிக்கதிர்களையும் விரித்துத் தோற்றுவித்தது ஒரு முகம். பிறிதொரு முகம் அன்பு நிறைந்த அடியவர்கள் நாளும் தன்னைப் போற்ற, அவர்கள் அன்புள்ளத்திற்கு நெகிழ்ந்து, அவர்க்கு இனிமையாகப் பொருந்தி ஒழுகி, அவர்பால்வைத்த அன்புப் பெருக்காலே அவர்களுக்கு வேண்டும் வரங்களைக் கொடுத்தது. மற்றொரு முகம் மந்திரத்தை ஒதுதலோடு அமையாது மெய்ந்நூல் கூறிய முறைமையிற் பிறழாத அந்தணர்களுடைய வேள்விகள் அசுரர்தம் செயலால் திங்கு நோதபடி நினைத்து நிறைவேற்றி வைக்கின்றது. ான்காவது திருமுகம் நூல்களாற் காட்ட முடியாது வருவியுள்ள மறைப் பொருள்களைக் தம் அன்பர்கள்

இன்பமும் காவலும் உறும்படி ஆராய்ந் துணர்த்தித் திங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/55&oldid=585939" இலிருந்து மீள்விக்கப்பட்டது