பக்கம்:முருகன் காட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 55.

பொருளை ஏமுற நாடி உணர்த்துவான் வேண்டி மார்போடு விளங்கியும் மார்பில் தொங்கும் மாலையோடு சேர்ந்து அழகுற்றும் பொலிகின்றன. ஐந்தாம் இணைத் திருக்கையில் ஒன்று தொடி நழுவும்படி மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை அளிக்கிறது; பிறிதொன்றான அதன் இணைக்கை இன்னோசை தரும் மணியை ஒலிப்பிக்கிறது. ஆறாம் இணைத் திருக்கைகளின் ஒரு கை உலகியல் நடை பெற நீலநிற மேகத்தாலே மழையை மிகுதியாகப் பெய்வித்து நிற்கவும் அதற்கு இணையான கை இல்வாழ்க்கை இனிது தொடங்கத் தேவ மகளிர்க்கு மனமாலையைச் சூட்டுகின்றது.

இவ்வாறு பன்னிரு கைகளும் முறையே ஆறு திரு முகங்களுக்கும் ஏற்ற முறையில் பொருந்தும்படி தொழி லாற்றுகின்றன.

பல வாத்தியங்கள் முழங்க, கொம்பு வாத்தியம் மிக் கொலிப்ப, வெண்சங்கு முழங்க, இடி போன்ற முரசம் ஒலி செய்யா நிற்க, வெல் கொடியிலிருந்து மயில் அகவ, சான்றோர்களாலே புகழப்பட்ட மிக்க சிறப்பினையுடைய வாமனூரலைவாய் என்னும் திருச்செந்துாரிற் சென்று கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலும் அம்முருகப் பெருமானுக்கு நிலைபெற்ற பண்பாகும். இவ்வாறு நக்கீரர் திருச்சீரலை வாய் என்னும் திருப்பதியில் திருமுருகன், ஆறு முகமும் பன்னிருகையுமாகக் கோலங்கொண்டு கொலு வீற்றிருக்கும்

வமையை அழகுறப் பாடுகின்றார்.

விசும்பா றாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே

-திருமுருகு ; 123-125

ஆவினன்குடி அ ைசதலும் உ

உயர்ந்தோராற் புகழப்பட்ட மிக வுயர்ந்த விழுமிய பெருமையினைக் கொண்ட திருச்சீரலைவாய் எனும் திருச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/57&oldid=585941" இலிருந்து மீள்விக்கப்பட்டது