பக்கம்:முருகன் காட்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

முதலாகக் கொண்டு உலகெலாம் என்று தொடங்கு கின்றது.

விண்ணுலகையும் மண்ணுலகையுங் காக்கவந்த இராமச்சந்திரமூர்த்தியின் சரிதையைச் சொல்லவந்த இராமாயணம் : உலகம் யாவையும்” என்று தொடங்கு கின்றது. இவை கட்கெல்லாம் வழிகாட்டியாக, நக்கீரர் கற்குகையினின்றுந் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர் களையுங் காக்க வேணும் என்று, கந்தவேளை வேண்டி முறையிடுங்கால் உலகம் உவப்ப என்று தொடங்கி யருளினார்,

நாம் இறைவன்பால் வேண்டும்போது இறைவனே என்னைக் காத்தருள்’ என்றுதானே வேண்டுகின்றோம். என்னைப் படைத்தருள்” என்னை ஒடுக்கியருள் என்று வேண்டுகின்றோமில்லை. இதனால் உகரத்தின் அருமை யும் பெருமையும் நன்கு புலப்படுகின்றதன்றோ?

முருகு” என்ற சொல்லை இப்போது சிந்தியுங்கள். ம்- உ, ர்+உ, க் + உ என்ற மூன்று உகரங்கள் வருகின்றன

இத்தகைய சொல் போன்று தமிழில் வேறு சொல் இல்லை.

உயிர்கள் மூன்று நிலைகளையுடையன: கேவல திசை, பெத்த திசை, முத்த திசை. இதன் பிரிவுகளை ஞான நூல்களால் அறிக.

  • - உயிர்கட்கு வேண்டுவதும் மூன்று சுகம். இகம் பரம் வீடுபேறு. இந்த மூன்று இடங்களிலும் காத்தருளுந் தெய்வம் முருகன். அதனால் அப் பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லையுடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான்.

இந்த மூன்று நலங்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள். பால் பாயசத்தை ஒரு கரண்டியைக் கொண்டு தானே படைக்கின்றோம். அதுபோல் இக நலனை வள்ளி தேவியைக் கொண்டும், பரநலனை தெய்வயானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/6&oldid=585944" இலிருந்து மீள்விக்கப்பட்டது