உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முருகன் காட்சி

பண்டைக்காலத்தே இத்திருவாவினன்குடி எனப்படும் இக்காலப் பழனிமலை பொதினி என்னும் பெயருடைத்தாய் ஆவி என்னும் வேளிர்குலத் தலைவனுக்கு உரியதாயிருந்தது என்பதைச் சங்க இலக்கியங் கொண்டு தெளியலாம். நச்சினார்க்கினியர் உரையால் இப்பழம்பதி ‘சித்தன் வாழ்வு னனவும் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ் வில்லந் தொறுமூன் றெளியுடைத்து-நல்லரவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்

என்னும் ஒளவையார் கூற்றால் இவ்வுண்மை புலப்படு கின்றது. நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னரே திருவாவினன்குடி பழனி என வழங்கப்பெற்றிருக்க வேண்டும் என்பதனை இது தெளிவிக்கின்றது. -

முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்

குற்றமற்ற அறக் கற்பினையுடைய தெய்வயானை யோடு ஆவினன்குடியில் வீற்றிருக்கும் அருட்டிரு முருகனைக் கண்டோம். ஈண்டு, திருவேரகத்தில் கொலு வீற்றிருக்கும் கந்தவேளைக் காண்போம். அறன் ந வில் கொள்கை அந்தனர் திருவேரகத்தில் தத்தம் கடமையினைச் செய்யும் கோட்பாட்டினை நக்கீரர் பெருமான் கவினுறக் கிளத்து கினறாா. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பாக்கமும்’ என்ற தொல் காப்பியத் தொடர் வேள்வி இயற்றும் அந்தணர் தம்மைச் சுட்டிக் காட்டுகின்றது. ஒதல் ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல, ஈதல், ஏற்றல் என னும் ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமற் கடனாற்றி, தாயும் தந்தையும் என லும் இருவர் குலமும் உலகத்தார் நன்றெனறு மதித்துப் பாராட்ட, பல்வகை மாட்சியும் நிறைந்த பழைய குடியிலே பிறந்த அந்தணர்களை முதற் கண் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/62&oldid=585947" இலிருந்து மீள்விக்கப்பட்டது