பக்கம்:முருகன் காட்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 . . மூருகன் காட்சி

கல்விப் பாகன் கையகப் படா அது ஒல்கா உள்ளத்து ஓடும்

ੇ -

டசிலப்பதிகாரம்: 23 : 36-39

என்று கூறியுள்ளார்.

முத்தி:எனப்படுவது ஆகவனியம், தக்கினர்க்கினியம், காருக பத்தியம் முதலியனவாகும். நாற்சதுரமும், முக் சதுரம் வில் வடிவுமாகிய மூன்று தீயால் உ ண்டாகிய செல்வத்தினையுடையாராய் உபநயனத்துக்கு முன் ஒரு பிறப்பும், பின்பு ஒரு பிறப்புமாக இரு பிறப்பினையுடைய அந்தனர் என்று நக்கீரர் குறிப்பிடுகின்றார். மூன்றான திக்க ளில் ஒன்று வேதத்தை வழங்கவும், ஒன்று தேவர் கட்குத் தட்சினை கொடுக்கவும், ஒன்று பூலோகத்தை ரட்சை பண்ணவும் என்ற விளக்கம் உரையாசிரியர்களால் கிடைக்கப்பெறுகின்றது. இந்த அந்தணர்கள் வழிபடுங் காலமறிந்து வாழ்த் துக்கூறி இறைவனை வந்திக்கின்றனர். பொழுதநறிந்து நுவல என்பதற்கு உதய காலத்தும் மத்தியான காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம், அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய என்ற உரை வகுப்பர் சிலர். அந்தணர்கள் பூணுரலினையும் புலராத ஆடையையும் அணிந்துகொண்டு தலைமேலே கு வித்த கையினராய் முருகனைப் பரவிப் புகழ்ந்து ஆறெழுத்தினை அடக்கிய கேட்டற்கரிய மந்திரத்தை நாப் புடைபெயரும் அளவிலே ஒதுகின்றனர். இவர்களை

புன்மயிர்ச் சடை முடிப் புலரா வுடுக்கை முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் -சிலப்பதிகாரம் :25: 126-128

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

• சரவணபவ” என்னும் மறைமொழியினை-கவே குமாராய’ என்னும் மறைமொழியினைப் பிறர் செவியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/64&oldid=585949" இலிருந்து மீள்விக்கப்பட்டது