பக்கம்:முருகன் காட்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கீரர் ఉr Gi முருகன் 65

இச் சீரிய கருத்தினையே தமிழ்ப்பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் அவர்களும் முருகன் அல்லது அழகு என்னும் தம் அரிய நூலில் விளக்கமுறப் புலப் படுத்திக்காட்டியுள்ளார். எங்கெங்கெல்லாம் அழகு கொலு விற்றிருக் கின்றதோ-க ளிநடம் புரிகின்றதோ, அங்கங்கெல் வாம் அழகுக் கடவுளாம் அணி முருகன் நெஞ் சமர்ந்து

து மறைகின்றான். கண்னைக் கொள்ளை கொள்ளும் கவினார் அழகு துலங்கும் இடம் மலையிடங்களே. தமிழ் நாட்டின் மலைகளிலெல்லாம்- குன்றுகளிலெல்லாம்

கொலு வீற்றிருக்கின்றான் வேலாயுதம் தரித்த கோலா கலனாம் குன்றெறிந்த குமரப் பெருமான்.

இனி நக்கீரர் பெருமான் கண்ட ஞாலப் புகழ் வெல்லும் கோலக் குமரனின் சீலத் திருமுகப் பொலிவு காண்போம். கந்தவேள் கோட்டத்தின் பூசாரியான படிமத்தான் வேலன். பச்சிலைக் கொடியாலே, நறுநாற்றத்தையுடைய காயாம் சாதிக் காயுடன், அழகினையுடைய தக்கோல மென்னும் காயுடனே கலந்து, காட்டு மல்லியுடன் வெண் வளியையும் சேர்த்துக் கட்டின கண் ணியை யுடைய வனாகக் கோலம் புனைந்துள்ளான். வாசனை வீசும் நல்ல .ெ (ன், சாந்தினை மார்பு முழுவதும் பூசியுள்ளான். அடுத்து மலைவாழும் குறவரோ வெனில் கொடிய தொழிலை யுடைய வன்மை பொருந்திய வில்லால் குறிஇலக்குத் தப்பாமற் கொல்லும் அரியதிறல் பெற்றுள்ளனர். நீண்ட |ங்கிலிலே யிருந்து நன்கு முற்றின தேனாற் செய்த கள் தெளிவினைத் தாம் மட்டும் உண்ணாராய், மலையிடத்துச் 1றிய ஊரிலே வசிக்கும் சுற்றத்தவருடன் கூடி உண்டு மகிழ் ன்ெறார்கள். பின்னர் அம்மகிழ்ச்சிக் களிப்பில் அக் குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது காளத்திற்கு ஒப்பக் குரவையாடி மகிழ்கின்றார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/67&oldid=585952" இலிருந்து மீள்விக்கப்பட்டது