பக்கம்:முருகன் காட்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

யம்மையைக் கொண்டும், முத்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான் முருகன்.

எனவே முருகப் பெருமானைப் பயன் கருதாது மெய் யன்புடன் வழிபடுவோர் இகம் பரம் வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்றுச் செம்மையுறுவார்கள்.

பாவம் நிறைந்த கலியில் கண்கண்ட தெய்வமாகக் கலியுக வரதனாக விளங்குபவர் கந்தவேள். இத்தகு முரு கனை ஞானிகள் தமது ஞான விழியால் கண்டார்கள்.

நமது தென்னாட்டில் வாழ்ந்த ஆன்றோர்கள் கடவு ளைக் கண்டேன் என்று கூறினார்கள்.

கண்டேன் அவர் திருப் பாதம் * - கண்டறி யாதன கண்டேன்.’ - அப்பர் எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த

இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேன்.” -மணிவாசகர்

இவ்வாறு இறைவனைக் கண்ட மெய்ஞ்ஞானிகள், தாம் கண்ட காட்சியைப் பலப்பலவாகக் கூறுகின்றார்கள். திருஞான சம்பந்தர், இறைவனை நேருக்கு நேராய்க் கண்டதோடு அமையாமல், அவருடைய அடையாளங் களைக் கூறித் தன் தந்தையாருக்கு, சுட்டியறியாத அப் பரமனைச் சுட்டிக் காட்டியருளினார்.

தோடுடையசெவி யன்விடையேறு ஓர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுட லைப்பொடியூசியென் உள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான் முனை நாள்பணிங் தேத்த அருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மான் இவனன்றே. கண்டார்; கானார்க்குக் காட்டுகின்றார்.

இந்த ஞானப் பரம்பரையில் வந்த அருணகிரிநாதருக்கு எங்கே நினைப்பினும் அங்கே வந்து கந்தவேள் காட்சி தருகின்றாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/7&oldid=585955" இலிருந்து மீள்விக்கப்பட்டது