பக்கம்:முருகன் காட்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகன் காட்சி

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் தகரன் மஞ்ஞையன் புகளில் சேவலங்

கொடியன் நெடியன் ■ 車 * * 車 車 ■ ■ ■ 畢 暉 ■ 誓 畢 睡 睡 睡 車

-திருமுருகு : 206-211 முரு காற்றுப் படுத்த உருகெழு வியன் நகர்

குன்று தோறாடும் குமரனின் கோலத்தினைச் சென்ற பகுதியில் கண்டோம். பழமுதிர் சோலையில் பாங்குடன் கொலுவீற்றிருக்கும் ஞானச் செல்வனை இனிக் காண் போம். ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினனாக விளங்கு கின்றான் முருகன். சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து, ஆட்டின் மறியை அறுத்து, கோழிக் கொடியினை உயர்த்தி, ஆங்கு முருகன் நிற்பதாக நினைத்து நிறுத்தி, ஊர் தோறும் ஊர் தோறும் மேற் கொண்ட தலைமை பொருந்திய விழாவிலும், பூவும் கொடியும் பிறவும் இன்றி, அன்பு நிறைந்தவர் தம் அன்புடைமையால் துதி செய்ய, விருப்பம் மிகுந்த தன் மனம் பொருந்துதல் வந்த இடத்தினும், வெறியாட்டாள னாகிய-முருகன் கோயில் பூசாரியாகிய வேலன் தன் முன்னோர் இழைத்தவாறு இழைத்த வெறியாட்டுக் களத்திலும், காட்டினும், சோலையினும் -9լէք(5 பெற்ற ஆற்றிடைக் குறையிலும், ஆற்றங்கரையின்கண்ணும் குளக்கரையின்கண்ணும், முற்கூறப்பட்ட ஊர்கள் அன்றி, வேறாகிய பற்பல ஊர்களிலும், நாற்சந்தியினும், முச்சந்தி யினும், ஐஞ்சந்தியினும் புதிய பூக்களோடு மலர்ந்துள்ள கடப்ப மரத்தின் கண்ணும், ஊர் நடுவே ஊரார் அனை வரும் கூடும் இடமாகிய மன்றத்தின் கண்ணும் பல ஊர் களுக்குப் பொதுவாகிய ஊரம்பலங்களினும், அருட்குறியாக நடப்பட்ட தறிநிற்கும் இடத்தின் கண்ணும் முருகப் பெருமான் நீக்கமற நிறைந்திருக்கின்றான். மாட்சிமை யுடைய தலைமை சான்ற கோழிக் கொடியோடு பொருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/70&oldid=585956" இலிருந்து மீள்விக்கப்பட்டது