பக்கம்:முருகன் காட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கரர் காட்டும் முருகன் 69

மாறு இயற்றி, நெய்யையும் வெண்சிறு கடுகையும் அரைத்து அப்பி, ஒதும் மந்திரத் தை மறையாக ஒதி, கொழுவிய மலர் களைத் துரவி, தலைகுனிந்து, கை கூப்பி வணங்கி வழி பட்டுக் கலியுக வரதனாம் கந்த னின் அருளினை வேண்டி நிற்கின்றனர் அடியார்கள்.

தொல் காப்பியம் புறத்தினை இயலில்,

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும்

-தொல் : புறத்திணை இயல் : 5 - மன்ற குறிப்பு வருகின்றது. அகப்பொருள் துறைகளுக்கும் வேலனின் வெறியாட்டுப் பொருந்தி வருகின்றது. சான்றாக,

நெடுவேள் பேணத் தணி குவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் அது வாய் கூறக் களன்கன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளங்கர் சிலம்பப் பாடிப் பலிகொடுக் து உருவச் செந்தினை குருதியோடு துரஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்

- அகநானுாறு : 22:6-11 க வன் ற அகநானுாற்றுப் பாடற் பகுதியினைக் காண்க.

அடியவர்கள் வேறு முறையாகவும் வணங்கி வழிபடு ,ெ1)ார்கள். தம்மில் வேறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை உள்ளொன்றும் புறமொன்று மாக, உடுத்து, செந்நிற நூலினைக் கையிலே காப்பாகக் கட்டி, வெண் பொரிகளைத் துரவி, வலிமிக்கதும் பெரிய கால்களை யுடையதும் ஆகிய கொழுத்த ஆட்டுக் கிடாயினை அறுத்து, அதன் செங்குருதியோடு கலந்த துரய வெண்ணிறமான அரிசியினைச் சிறு பலியாகத் தந்து, பல தானிய வித்துக் களையுடைய கொள்கலங்களையும் வைத்து, அறுத்த சிறு பக மஞ்சட் குழம்போடு நறுமண முள்ள சந்தனக் குழம்பைக் கலந்து தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரியிலையை யும், ஏனைய நறுமணம் வீசும் குளிர்ந்த மாலைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/71&oldid=585957" இலிருந்து மீள்விக்கப்பட்டது