உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T6 முருகன் காட்சி

தம்மில் இணை ஒத்து அறும்படியாகப் பொருந்த அறுத்து, அவ்வாறு அறுத்த இருமாலைகளை நான்கு பக்கங்களிலும் தொங்கும்படி கட்டி, செறிந்த மலைப்பக்கத்துள்ள நல்ல ஊர்களை-கோயில்களை வாழ்த்தி, நறுமணம் கமழும் தாபங்களைக் கொடுத்து, அந்த மலை நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடி மலைவாழ் மக்கள் வணங்கி

நிற்கின்றனர்.

மலை உச்சியிலிருந்து இழுமெனும் ஒசையை இசை யென முழக்கிக் கொண்டு விழுகின்ற அருவி ஓசையோடு இனிய பல இசைக் கருவிகள் ஒலிக்க, சிவந்த நிறத்தினை யுடைய பல பூக்களையும் துரவி, அச்சம் தோன்றும்படி, குருதி அனைந்த சிவந்த தினை யரிசியையும் பரப்பி, குறத்தி முருகனுக்கு உவப்பினைக் கூட்டும் இசைக் கருவிகளை முழங்கச் செய்து, தெய்வம் என்று மறுத்துக் கூறுபவர் அஞ்சும்படியாக அம் முருகப் பெருமான் அன்பர்களிடம் எழுந்தருளும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்திய அத் திருக்கோயிலின் எதிரே, தெய்வமேறி ஆடும் வெறியாடு களம் ஆரவாரிக்கும்படி, வெறிப் பாடல்களுக்கு இயைந்த பாடல்களைப் பாடி, கொம்பு வாச்சியங்களை வாயில் வைத்து ஊதச் செய்து, ஒசை மிக்க மணியை ஆட்டி ஒலிக்கச் செய்து, என்றும் புறங்கொடுத்து ஓடாத சிறந்த கொள்கையையுடைய அவனது பிணிமுகம் என்னும் பெயரையுடைய யானையை வாழ்த்தி, அன்பராயினார் தாம் நினைத்த வடிவத்தில் கண்டு தாம் விரும்பியவற்றை விரும்பிய வண்ணமே பெற்று நிற்குமாறு அவர் வழியில் வந்து பொருந்த முன்சொன்ன விழாவும், வேலன் வெறி யாடு களமும், காடும், காவும், துருத்தியும், ஆறும், வைப்பும், சதுக்கமும், சந்தியும், கடப்பும், மன்றமும் பொதியிலும், குறத்தி முருகாற்றுப் படுத்த கோயிலும் (நன்னகர்) ஆகிய அவ்வவ்விடங்களிலே தன் ஊர்தியாகிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/72&oldid=585958" இலிருந்து மீள்விக்கப்பட்டது