-
“72 * - ----- - முருகன் காட்சி
நிலையிலும், முருகாற்றுப்படுத்த உ ரு .ெ க ழு வியன் நகரினும், முருகன் உறைகின்ற-எழுந்தருளியுள்ள இடங்களிலே யன்றியும், பிற இடங்களிலும் ஒருமுகப் பட்ட மனத்திலே தாமே அமைத்துக்கொண்ட திருக் கோலத்திற்கு ஏற்ப, அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தானே விரும்பி நோக்கி, வாயானே வாழ்த்தி வணங்கி, கையைத் தலைமேலே குவித்துப் புகழ்ந்து, அப் பெருமான் தன் திருவடிகளில் தலை பொருத்தும்படி விழ்ந்து கும்பிட்டு வணங்குதல் வேண்டும் என்று குறிப்பிடு கின்றார் நக்கீரர் பெருமான். இவ்வாறு இறைவழிபாடு செய்யும் முறையினைத் தொண்டர் சீர்பரவ வல்ல’ சேக்கிழார் பெருமான் திருவாக்கானும் அறியலாம்.
கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே பெய்யுங் தகையன கரணங் களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும் மெய்யுங் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
-பெரியபுராணம்: திருநாவுக்கரசர்: 167.
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகன்
இனி, நக்கீரர் பெருமான் முருகனின் அருளினையும் தெறலினையும் வீரத்தினையும் வெற்றியினையும் பலபடப் புகழ்ந்து புசுழ் மாலை சார்த்திப் பாராட்டுகின்றார். ஓங்கி உயர்ந்த பெரிய இமயமலையின் உச்சியில் சரவணம் என்னும் தருப்பைப்புல் வளர்ந்துள்ளதால் நீல நிறம் கொண்டு காட்சியளிக்கும் சுனையில் சரவணப்பூம் பொய் கையில், ஆகாயம், காற்று, தீ, நீர், நிலன் என்னும் ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்புக் கடவுள் முக்கண்ண னுடைய நெற்றிக் க ண் ண ா கி ய அனற் கண்ணிலே