பக்கம்:முருகன் காட்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்ரேர் காட்டும் முருகன் тз.

!தான்றிய ஆறு அனற் பொறியினைத் தன் அகங்கையில் சbறுச் சென்று சேர்க்க, அருந்ததி யொழிந்த ஆறு so (ரிஷி) பத்தினியரும் அந்த ஆறு பொறிகளிலிருந்தும் தான்றிய ஆறு குழந்தைகளையும் தாமே பெற்ற தாயா சாகக் கருதிப் பேணி வளர்க்க, ஆறு வடிவு பொருந்திய ரிசல் வனே! கல்லால மரத்தின் கீழே இருடிகளுக்கு அனோபதேசம் செய்த சிவபெருமானின் செல்வனே! அலைகளில் மிக உயர்ந்ததனால் மாண்பு பெற்ற மலை அயன் மகள் உமாதேவியின் மகனே! உன் அன்பர்க்கும் அடியார்க்கும் தீங்கிழைக்க நினைக்கும் பகைவர்க்குக் கூற்றுவனே! வெற்றி குறித்து வெல்லும் போரினைச் செய்யும் துர்க்கையின் மைந்தனே! பூண்கள் அணிந்த முலைமையினையுடைய காடுகிழாளுடைய மகனே! தேவர் வளி வணங்குகின்ற விற்படைத் தலைவனே! இன்பத்திற்குரிய கடப்ப மாலையை யணிந்த மார்பை யுடையோனே! அல்லா வகை நூல்களையும் முற்ற உணர்ந்த புலவனே! 1ாtத் தொழிலில் தான் ஒருவனாக நின்று மேம்பட்டுப் பெரிய வெற்றியினைக் கொள்ளுவோனே! அந்தணர் கருக்குப் பொருட் செல்வமாய் இருப்போனே! அறிவு சான்ற பெரியோர்கள் புகழ்ந்து சொல்லும் சொற்களின் பொருள் தொகுதியாய் இருப்பவனே! தெய்வயானையாரும் வள்ளிநாச்சியாரும் ஆன மகளிர்க்குக் கணவனே! வலிமை மிக்க வீரர்க்கு அரியேறு போன்றவனே! வேல் ஏந்தின பெருமை பொருந்திய கையால் பெற்ற வெற்றியால் அமைந்த பெரும் வீரச் செல்வமுடையவனே! கிரவுஞ்சம்

ஆறும் மலையைப் பிளந்த, குறைவற்ற வெற்றியை புடைய, வானத்தை அளாவும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்திற்கு உரிமை பூண்டவனே! பலரும் புகழ்ந்து சொல்லும் நல்ல சொற்களையுடைய கவிப்புலவர்க்கு அரியேறு போன்றவனே! பெறுவதற்கு அரிய முறைமை 1னையுடைய பெரிய பொருளாகிய வீட்டையுடைய முருகனே! வீட்டுப் பேற்றைப் பெறவேண்டும் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/75&oldid=585961" இலிருந்து மீள்விக்கப்பட்டது