பக்கம்:முருகன் காட்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

முருகன் காட்சி

வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை

மங்கையர் கணவ மைந்தர் ஏறே

வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர் புகழ் கன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள அலங்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரி சிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருங் குரி சில் எனப்பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னறிந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் கின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு - புரையுநர் இல்லாப் புலமை யோயெனக் குறித்தது மொழியா அளவை,பிற் குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறு பெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமகின் வண்புகழ் நயந்தென இனியவும் நல்லவும் கணிபல வேத் தித் தெய்வஞ் சான்ற திறல் விளங் குருவின் வான்தோய் வெப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளகலங் காட்டி அஞ்சல் ஒம்புமதி அறிவன் கின் வரவென அன்புடை கன்மொழி அளைஇ விளிவின்று இருள்கிற முந்நீர் வளைஇய உலகத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/78&oldid=585964" இலிருந்து மீள்விக்கப்பட்டது