பக்கம்:முருகன் காட்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கிரர் காட்டும் முருகன் 79

நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று வன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடங்டை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்பச் சேண்கின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

-திருமுருகு : 293-317 முடிவுரை

இலக்கிய நயமும் பக்தி நயமும் கெழுமியமைந்த பாடல்கள் பத்து, பத்துப்பாட்டும் சேர்ந்துள்ள பழைய பட்டுப் பிரதிகளில் காணப்பெறாமல், திருமுருகாற்றுப் படை மட்டுமுள்ள புதிய ஏட்டுப் பிரதிகளிலும் அச்சுப் 1 திகளிலும் காணப்படுகின்றன. இப்பாடல்கள் அனைத் து பிற்காலப் புலவர்கள், திருமுருகாற்றுப்படையில் | lளந் தோய்ந்து ஈடுபட்டதன் பயனாகப் பிறந்த கவைப் பாடல்கள் எனலாம். இவற்றில் சில பாடல்கள் இன்று பயின்று வழங்கப் பெறுகின்றன. இவையனைத்தும் !” ால் இயற்றப் பெற்றவை அல்ல என்பதே பொருந்

ப முடிவாகும். முதற் பாடல் வருமாறு:

குன்ற மெறிந்தாய் குறைகடலிற் சூர்தடிந்தாய் புன்றலைய பூதப்பொரு படையாய் என்றும் இளையா யழகியா யேறுார்ந்தா னேறே உளையா யென்னுள்ளத் துறை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/81&oldid=585969" இலிருந்து மீள்விக்கப்பட்டது