உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கிரர் காட்டும் முருகன் 8:1

முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒருகைமுருகன் தம்பியே கின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் கம்பியே கைதொழுவேன் நான். காக்கக் கடவிய காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா-பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்கான் இரங்காய் இனி.

இங்குக் காட்டப் பெற்ற இப்பாடல்கள் நாள்தோறும் திருமுருகாற்றுப்படையினை ஒதுவார் இறுதியில் தவறாது பாடி வணங்கும் பக்திப் பாடல்களாகும்.

திருமுருகாற்றுப்படையினை நாள்தோறும் பாராயணம் செய்வார் பெறும் பயன்களைப் பின்வரும் இருபாடல்களும் குறிக்கும் : -- பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு-சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். நக்கீரர் தாமுரைத்த கன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல மாமுருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளித் தானினைத்த எல்லாங் தரும். ‘கற்பனைக் களஞ்சியம்’ எனப் போற்றப் பெறும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சீகாளத்திப் புராணத்தில் திருமுருகாற்றுப்படையைப் பின்வருமாறு பாராட்டுகின்றார் :

இன்னன கினைந்து கீர னிலங்கிலை கொடுவேற் செம்மல் பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதின் உன்னிய வுன்னி யாங்கிங் குதவுவ தாகிப் பாவுண் முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொ ழிந்தான்.

- -சீகாளத்திப் புராணம் : நக்கீரர் : 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/83&oldid=585971" இலிருந்து மீள்விக்கப்பட்டது