பக்கம்:முருகன் காட்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - முருகன் காட்சி

நிலக் கோமானாம் குமரக் கடவுள் செந்நிறம் பொருந்தி யவன் என்பது பெற்றாம்.

மேலும் இவ் அனைத்துப் பெயர்களினும் முருகன் என்ற பெயரே சங்கப் புலவர் பெருமக்களால் யாண்டும் பெருவரவாக ஆளப்பட்டுள்ளது என்பதனைப் பின்வரும் பகுதிகள் கொண்டு தெளியலாம்.

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக

-திருமுருகு: 0 முருகன் சீற்றத்து உரு கெழு குருசில்

-பொருநராற்றுப் படை : 1.31 முருகென மொழியும் வேலன்

-ஐங்குறு நூறு : 129 : 2 பெரும்பெயர் முருக

-பரிபாடல் : 5 : 50 சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமுகு முருகன் தண்பரங் குன்றத்து

-அகநானூறு 59 : 10.11 முருகன் ஆரணங் கென்றலின் -

-அகநானுாறு : 98; 10 முருகன் அன்ன சீற்றத்து -

-அகநானூறு 158 : 16 கார்ங்றுங்கடம்பின் பாசிலைத் தெரியல் சூர் நவை முருகன் சுற்றத் தன்னகின்

  • -புறநானுாறு : 23 : 3.4 முருகொத் தீயே முன்னியது முடித்தலின்.

-புறநானுாறு : 56 : இவ் எடுத்துக்காட்டுகள் கொண்டு பெரும் பெயரி முருகனின் அரும் பெறல் திறனை இனிதின் அறியலாம். பரிபாடலின் ஐந்தாம் பாடலில் கடுவன் இளவெயின னார் என்னும் புலவர் முருகன் பிணி முகம் என்னும் யானை மீதேறிப் போர் நடாத்திச் சூரனை வென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/88&oldid=585976" இலிருந்து மீள்விக்கப்பட்டது