பக்கம்:முருகன் காட்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடற் புலவர்கள் காட்டும் முருகன் 89.

மணிநிற மயிலினையும் உயர்ந்தகோழிக் கொடி வினையும் உடைய முருக! பிணிமுகத்தின் மேல் ஊர்ந்து போர் செய்து வெற்றி கொள்ளும் தலைவ! பிறவித் துன்பம் நீங்கிய இன்பம் மலிந்த நாட்களை யாம் பெறுக வென்று மின்னைவேண்டி யாமும் எம் கேளிரும் மக்களைப் பணிந்: தொழுகுதலின்றி, நின் புகழையேத்தி நின் பரங்குன்றத் நினைப் பாடித் தொழுகின்றோம்! அருள் புரிவாயாக.”

இவ்வாறு வணங்கும் அடியவர் அன்பின் திறந்தான்.

வான்னே!

பரிபாடலின் பதினெட்டாவது பாடலில் சூரன் மாமரமாய் நின்றதும், முருகன் வேல் கொண்டு பிளந்தது. மாகிய வரலாறும் பின்னர் அகத்திணைக்குரிய செய்தி களும், சிறப்பாகக் குறிஞ்சித் திணைக்குரிய முதல், கரு, ம.ரிப் பொருள்களும் கிளத்திக் கூறப்பட்டுள்ளன. s

பரிபாடலின் பத்தொன்பதாம் பாடலில் புலவர் நப்பண்ணார் வள்ளி தெய்வயானை ஆகிய இருவர் தம் திருமண நிகழ்ச்சியினை முதற்கண் கூறி, மதுரை மாநகர மக்களின் வாழ்க்கைப் போக்கினை இடையில் சுட்டி, இறுதியில் குன்றமர்ந்த குமரவேளை வாழ்த்தி முடிக் கின்றார்.

நல்லச்சுதனார் என்னும் நல்லாசிரியர் பரிபாடலின் இருபத் தொன்றாம் பாடலில் முருகன் ஊர்ந்தது, தொட்டது, கையது பூண்டது, அமர்ந்தது ஆகிய செயல் களை அழகுற வருணித்துள்ளார். பின்னர் அகப் பொருளை மாண்புற விளக்கிக் கூறி, இறுதியில் மாற்றாரைப் போரின்கண் கூரிய வேற்படையும் பன்னிரு தோளையும் ஆறு திருமுகத்தையும் கொண்டு அடியோடு அழித்த செல்வ! சுற்றத்தோடு ஒருங்கே நின் அடியின் கண் உறைதல் இன்று போல என்றும் எமக்கு இயைவதாக என்று பரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/91&oldid=585980" இலிருந்து மீள்விக்கப்பட்டது