*
5. இளங்கோவடிகள் காட்டும் முருகன்
முருகன் தமிழ்க் கடவுள். முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன் என்று பொருள். பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் முருகனைப் பரவிப் பேர்ற்று ன்ெறன. தமிழில் உள்ள நூல்களில் மிகப் பழமையாகக் கருதப்படுவது தொல்காப்பியமாகு ம். அந்நூல் ஒர் பிலக்கண நூல் என்பது வெள்ளிடை மலை. நூலிலேயே முருகன் குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வமாகக் குறிக்கப் பெறுகிறான். இதனைத் தொல்காப்பியனார், சேயோன் பிய மைவரை யுலகம்’ என்று குறிப்பிடுகின்றார். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குன்று தோறும் முருகன் கோயில் கொண்டுள்ளான். குன்று தொறாடல் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் ஒன்றாகும். குன்று தோறும் முருகன் ஆடி வருகிறான்.
நாட்டு மக்கள் வாழ்வினையும் அவர் தம் ஆடல் பாடல் முதலான கலைகளையும் நன்கு கண்டவர் இளங்கோவடிகள், அது பொழுது வழங்கிய நாட்டுப் பாடல்களுக்கும் ஆடல்களுக்கும் இலக்கியத்தில் சிறப்பான இடம் தந்த முதல்வர் அவர். இளங்கோவடிகள் குன்றத்தில் வாழும் குறமகளிர் முருகனைப் பரவிப்பாடி மகிழ்ந்த மையைச் சிலப்பதிகாரத்தில் செவ்விதின் உணர்த்து கின்றார். --
இளங்கோவடிகள் சமயவொற்றுமையை விரும்பியவர். சமயத்தினையும் ஒத்து நோக்கும் இனிய இயல்பினர். அவர் தம் நூலில் பல்வேறு சமயக் கடவுளர்களையும் குறிப்பிடுகின்றார். * பலவிடங்களில் சிவபெரும ானைப் புகழ்ந்து பேசுகின்றார். அருகக் கடவுளைக் கவுந்தியடிகள் வாயிலாகப் புகழ்கின்றார். ஆய்ச்சியர் குரவையில் கரிய அனைக் காணாத கண்ணென்ன கண்ணே என்று திருமா