பக்கம்:முருகன் காட்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவடிகள் காட்டும் முருகன் s 93

பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருங்ாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே.

-சிலம்பு: குன்றக் குரவை : 8 இப்பாட்டில் குறிப்பிடப் பெறும் செந்தில் திருச்செந் நூராகும். இதனைப் புறநானுாறு,

வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை

- புறநானூறு: 55: 18.19 என்று குறிக்கின்றது. இத்தலம் திருச்சீரலைவாய்ன்ேறு திருமுருகாற்றுப்படையில் கூறப்படுகிறது. வெண்குன்று என்பது கவாமிமலை என்பர் அரும்பதவுரைகாரர். ஏரகம், மலை நாட்டகத் தொரு திருப்பதி என்பர் நச்சினார்க் கினியர். முருகன், சூர்மா தடிந்த செய்தி,

பத்திரா பதிமிசைப் பனிக்கடற் பிறந்த வெஞ்சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து முருகவேள்.................. =

- பெருங்கதை: 1.42: 229.31 என்று பெருங்கதையிலும் கூறப்பெறுகிறது.

அடுத்த பாட்டில், மயில் மீதேறி அசுரர் பெருமை எல்லாம் அழித்துத் தேவர்க்கரசனான இந்திரன் போற்றப் பகைவர்களை அழித்த வேல், ஓராறு திருமுகமும் ஈராறு கையுமாய் ஒப்பாரற்று விளங்கும் முருகன் ஏந்திய வேலே யாம் என்கின்றனர் குற மகளிர்:

அணி முகங்கள் ஓராறும் ஈராறு கையும் o இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே பிணி முகமேற் கொண்டு அவுணர் பீடழியும் வண்ணம் மணி விசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே

-சிலம்பு: குன்றக் குரவை 9 ஈண்டுப் பிணிமுகம் எனப்படுவது மயிலாகும். இதனைக் கல்லாடம்,

மு.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/95&oldid=585984" இலிருந்து மீள்விக்கப்பட்டது