பக்கம்:முருகன் காட்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவடிகள் காட்டும் முருகன் 95

கயிலைகன் மலையிறை மகனைகின் மதிநுதல் மயிலியன் மடவரன் மலையர்தம் மகளார் செயலைய மலர்புரை திருவடி தொழுதோம் அயன்மணம் ஒழியருள் அவர் மணம் எனவே.

மலைமகள் மகனைகின் மதிநுதல் மடவரல் குலமலை யுறை தரு குறவர் தம் மகளார் நிலையுயர் கடவுள்கின் இணையடி தொழுதேம் பலரறி மணம் அவர் படுகுவர் எனவே.

குறமகள் அவள்ளம் குலமகள் அவளொடும் அறுமுக வொருவன்கின் அடியிணை தொழுதேம் துறைமிசை நின திரு திருவடி தொழுநர் பெறுகருன் மணம்விடு பிழைமணம் எனவே.

- சிலம்பு : குன்றக் குரவை : 15.18

இவ்வாறாகக் குறமகளிர் நீலப்ப றவைமேல் நேரிழை கன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரவேண்டும். என வேண்டுகின்றனர். குறமகளும் குறவர் தம் குலமகளு மாகிய வள்ளிநாயகியைப் பரவுகின்றனர். இவ்வண்ணம் ‘ஆறிரு தடந்தோளினையும் அ று மு. க த் தி ைன யு ம், வெற்பைக் கூறுசெய் தனிவேலினையும், செவ்வேள் ஏறிய மஞ்ஞையினையும், மாறிலா வள்ளியினையும் வாயாரப் புகழ்ந்து நெஞ்சாரத் துதித்துக் குன்றுவாழ் குறவர்கள் வழிபடுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/97&oldid=585986" இலிருந்து மீள்விக்கப்பட்டது