பக்கம்:முருகன் காட்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் காட்டும் முருகன் 97

காண்டங்களில் முதல் ஆறு காண்டங்களைத் துரய ஆற்று ரோட்டம் போன்று தமிழ்நடை அமையும் வண்ணம் தமிழில் இயற்றியருளியவர் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் ஆவர்.

கச்சியப்பர் காஞ்சிபுரத்தினர்; சிவநெறி மறவாத பிந்தையர்; தம் வழிபடு கடவுளாக முருகப் பெருமானைக் கொண்டவர். இதனை இவர் என் உளத்தின் உலவும் சிவன் உமைக்கினிய மைந்தன்’ எனத் தம் நூலில் குறிப்பிட்டுள்

ாமை கொண்டு அறியலாம். இவருடைய தந்தையார் பெயர் காளத்தியப்ப சிவாசாரியர் என்பது. மேலும் இவர் வேதம், ஆகமம், அங்கம் ஆகிய அனைத்து நூல்

களையும் பழுதறக் கற்ற புலமையாளர் ஆவர். இவர் காஞ்சிக் குமரகோட்டத்தில் கந்த புராண நூலினை அங்கேற்றினார். கந்த புராணம் என்ற பெயர், ஆசிரியரா லேயே நூலிற்கு வழங்கப்பட்டது என்பதனை, காதைக் கெவன் பெயர் என்றிடில்...... போற்று கந்த புராணம தென்பதே’ என்ற இவர்தம் அவையடக்கச் செய்யுள் கொண்டு அறியலாம்.

பெரிய புராணத்தினை இயற்றச் சேக்கிழாருக்குச் சிவபெருமான் உலகெலாம் என அடி எடுத்துக் கொடுத்தது போன்று, கச்சியப்ப சிவாசாரியரின் கனவில் கந்தவேள் தோன்றி அன்ப! நமது புராணத்தைத்

தமிழில் தருக” எனக் கட்டளையிட்டதோடு திகட சக்கர’ என முதலும் எடுத்துத் தந்து மறைந்தனர் ாணவும் கர்ண பரம்பரைச் செய்தியொன்று உலவு ன்ெறது.

இத்தகு தெய்வத் தொடர்பு கொண்ட நூலின்கண் க வியப்ப சிவாசாரியர் கந்தவேளின் பிறப்பு வளர்ப்பு வலாற்றினையும், சூரனை ஒழித்துத் தேவர் துயர் வளைந்து, இந்திரன் வளர்த்த தேவானையைக் கற்பில் கொண்டு, வள்ளி மலையில் நம்பிராசன் மகளாய் வளர்ந்த வள்ளியைக் களவிற் கொண்டு அடியவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/99&oldid=585988" இலிருந்து மீள்விக்கப்பட்டது