உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் முறையீடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

மாசறு மனத்தே னாகி மாண்புறு குணத்தே னாகி
பேசரும் புலமை வாய்ந்து பேரருள் பெற்றுன் பாத
வாசமே பெரிதாய்க் கொண்டு வள்ளவே யென்றன் பாவம்
நாசமே அடைந்து வாழ நல்லறம் நவில்கு வீரே.

மாங்குயி லனைய சொல்லால் மன்வலி யழிக்கும் வண்ணப்
பூங்கொடி யனையார் தம்பின் போயுழன் றலைந்து பின்னும்
ஏங்கிநின் றலைவோர் உய்யும் இன்பருள் தருவாய் அண்ணால்!
தேங்கமழ் சோலை சூழுந் திருத்தணி உறையும் வேளே.

ஒருகண மேனு முண்டி ஒடுங்கிடக் காணேன் ஊனைத்
தருதிறம் வளர்க்க வேறு தவவுடல் புசிப்பேன்
தீய பெருங்கொலைத் தொழில்கள் செய்த பேதை நின்னருள்கா ணாது வருங்கொடுங் காலன் முன்னால் வாய்திறந் தென்சொல் கேனோ.

சேற்றிடை யாழ்ந்தும் புன்னா யெனத்திரிந் துழலும் நெஞ்சை
மாற்றி நன் னெறியுய் வித்துன் மாசறு புகழே நாளும்
போற்றிலேன் தானம் பூசை புரிந்திலேன் என்னின் பொல்லாக்
கூற்றுவன் ஏவும் பாசக் கொடுமை கட் கென்சொல் கேனோ.

பாவிநா னென்றேன் தீய பதகனே யென்றேன் நின்னைத்
தாவினே னென்றேன் ஏனோ தாமத மென்றேன் பின்னைக்
கூவினே னென்றேன் நின்றன் குழந்தையானென்றேன் என்பால்
மேவிநீ அருளா தேனோ மேலவர்க் கிறைவ னாரே.

முந்தியுன் னடிபேணி முக்தியுற்றுலகுய்யும் முறைபோ தித்த எந்தையாம்வடலூர்வாழ் ஏந்தலாம் அன்னவருக் கினிதேயின்பம்
தந்த நீ இன்றுமொரு தமியனுக் கருள்புரியத் தயங்கு கின்றாய்
கந்தனே நின்பாத் கமலே சதமென்று கருதி னேனே

அடிமைவாழ் வகத்தி வீர ஆண்மையும் அறிவுந் தந்து
மயில் வாழ்வு மெய்தி மனமகிழ் வெற்றி பூண்டு
மிடியிலாப் பேரானந்த மேன்மையுஞ் செய்வாய் செந்தில்
குடிபுகு மரசே ஏழைக் குறைகளைத் தீர்ப்பாய் கோனே.