பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஆந் திருமுறை திருத்தொண்டர் புராணமாம் பெரிய புராணத்துக்கு ஒப்ப, முருகவேள் தொண்டர்களின் புராணம் சேய்த்தொண்டர் புராணம் என்னும் அருமைப் பெயருடன், ஒன்று வெளி வரலாம். அது பன்னிரண்டாந் திருமுறையாம். த் திருமுறைகள், திருப்புகழ் பதிப்பாசிரியர் திரு. வ. த •ಷಿಸಿ பிள்ளை அவர்கள்ன் திருந்திய முறைப்படி, அவர்கள் சந்ததியாராம் எங்கள் சார்பிலும் உரிமையிலுமே அச்சிட்டு வெளியிடப்பெறுகின்றன. முருகவேளின் அடியார்கள் இத் திருமுறைகளை உவந்து ஏற்றுப் பாராயண நூலாகக் கொண்டு, பன்னிருகைப் பெரு மானது திருவருளைப் பெற்று இம்மை மறுமைப் பயன்களை அடைந்து பொலிய விழைகின்றோம். சென்னை, வ.சு. செங்கல்வராய பிள்ளை 12-4-1951. வச. மயிலேறும்பெருமாள் பிள்ளை இரண்டாம் பதிப்பின் முகவுரை திருப்புகழ் திருமுறையின் இரண்டாம் பகுதி இப்போது வெளிவந்துள்ளது. முதற் பகுதியின் பிரதிகள் கைவசமில்லாத தால், அதன் இரண்டாம் பதிப்பு (விளம்பரத்தில் கண்டபடி) வெளிவருகின்றது. இந் நண்முயற்சியை மேற்கொண்டவர் வள்ளிமலை திருப்புகழ் சுவாமியின் சீடர்களில் ஒருவராகிய கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களின் மனைவியர் திருநிறை மீனாகூரி அம்மையார். இவ்வம்மையாருக்கு முருகண் திருவருட் செல்வம் நிறைந்து விளங்குமாறு அவனது பொன்னார் திருவடியைப் போற்றுகின்றோம். 292, லிங்க செட்டித் தெரு வ.சு. செங்கல்வராய பிள்ளை சென்னை, வ.ச. மயிலேறும் பெருமாள் பிள்ளை 6-10-1952.