பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்து) திருப்புகழ் உரை 85 முதலில் சலித்தும் பின்னர்ச் சிரித்துக்கொண்டு அழைத்துச் சென்றும், சார்ந்து பசப்புகின்ற பெண்கள், (இத்தகையாரது) கொங்கையால் (வரும்) துன்பத்தால் தவிப்புண்டு இங்கு (மனம்) சுழல்வேனோ! தேவர்களின் கூட்டம் தி செய்து அந்த ஐந்தெழுத்தால் (வரும்) இன்பத்தில் மகிழ்ந்து, உண்ணுதல் இசை பாடுதல் ஆகிய சுகத்தில் திளைத்து இன்ப்ம் கூடுதலைச் சிந்தும்படி (அழியும்படி அசுரர்கள்) செய்த காரணத்தால் (தேவர்களைத் துன்புறுத்தியதால்) அங்கு அசுராகளை - - - மிதித்துக் கசக்கியும், பந்தடிப்பதுபோல அடித்தும் சங்க (வெற்றி) ஒலி செய்தும் (கிரெளஞ்த) மலையைப் பொடி படுத்தியும், இசையொலி (துதி யொலி கேட்டு) ழ்ந்தும், கண் களிப்புக் கொண்ட வேலா! (உன்னை வணங்குவதால்) தலை பயன் பெறுதலையும், (உன்னைக் கைகூப்பித் தொழுவதால்) கைகள் பயன் பெறுதலையும்(உனக்குக்) கடப்பமாலை சூட்டுதலால் பயன் பெறுதலையும், சிவமாந் தன்மை பெறுதலையும், தவநிலை பெறுதலையும் தருவோனே (தந்து அருள்பவனே)! தினைப்புனத்துத் தொடர்புடைய குறப்பெண் (வள்ளி) சீர் (நிறைந்த) சசிப்பெண் (தேவ் சேனை) இவர்தம் கொங்கையில் துயில்கொள்ளும் (பெருமானே) செழித்து வரும் திருச்செந்துாரில் வீ நீதிக் பெருமாளே! (தவிப்புண்டிங் குழல்வேனோ) மனைவி தாய் வீட்டில் இருக்கிறாள்' என இருவருக்கும் தருக்கம் வரச் செட்டி அடுத்திருந்த திருவாலங் காட்டுப் பழையனுர் வேளாளர்கள் முன்பு முறையிட, செட்டியின் மனைவிபோல வடிவெடுத்து வந்த பிரமகத்தி நான் இவர் மணைவிதான்; கர்ப்பமாயிருக்கிறேன்; இன்று இரவு மாத்திரம் இவருடன் ஓர் அறையிற் படுக்க உத்தரவு இடுங்கள் என, வேளாளர்கள் நீ இவளுடன் படுத்துக்கொள்; உனக்கு ஆபத்து வந்தால் நாங்கள் எழுபது பேரும் எங்கள் உயிரைக் கொடுக்கின்றோம் எனக் கூறி அவனை அவளுடன்