பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1014

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 541 அடக்க வல்லன, பொல்லாத கொலைத் தொழிலுக்கு இடங்கொடுப்பன, கொடிதான முகபடாம் (மேலாடை) அணிவன; இன்பந்தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் தக்க முறையில் நன்றாக ப்ோர்புரிய வல்லன விருதில் (வெற்றிச் சின்னமாக) புளகாங்கித சுகத்தாலும் மென்மையாலும் வளர்கின்ற இளைஞர்களின் புத்திக்கு இடர் (வருத்தத்தை) தருவ (விளைவிப்பன்), கட்டப்பட்ட ரவிக்கையால் நெருக்கு உன்பன: கயல்மீன், மகரமீன் இவைகளின் நிகரம் (கூட்டம்) மிக்கு வியன் (சிறப்பு) பொருந்திய நதியில் முதிர் (நிறைந்த) சங்கு இப்பி (சிப்பி), முத்து இவைகளை அணிவன, மேலெழுந்து பாரங்கொண்டு விளங்குவன ஆகிய கொங்கை களை உடைய மாதர்கள். மகிழம்பூ, குவளை மலரின் இதழ் இவைதரு மணமும், கத்துாரியும் கலந்து, கருநிறத்தால் மேகத்தையும் வென்று வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசைய, ருசிக்கின்ற இனிப்புள்ள அமுதத்தாலாகியதும், தன் வசப்படுத்தக் கூடியதுமான மொழியானது மயில், குயில் என்கின்ற புட்குரலைக் காட்ட வம்பு தருகின்ற மல்யுத்தம் (கலவிப்போர்) செய்ய, வருகின்ற யமனுடைய அரணமொடு வேலுடன் ஒத்து முடுகிப் போர் புரியும் கண்கள் இரண்டும் மிகவும் சிவக்க மகிழ்ந்து (கொடுத்த பொருளுக்கு நன்றி பாராட்டுவதான (கல்விப்) போரில் நகத்தின் நுனி ரேகைகள் குறிகள்) வகைவகையாக உடலிற் பொருந்த வளைகள் கழன்று விழ, இடை நெகிழ்ச்சியுற, வாயிதழ் ஊறலை உண்டு, உள்ளம் பிரமிக்க, ஆசை பூண்டு பொருந்தி அணைக்கும் (அவதி) துன்பம் நின்றந்த புண்ர்ச்சி வலையில் என்னுடைய அறிவு கொண்டுள்ள க்லை (நூலறிவு) அழிவுபடுதல் நீங்குதலாகி (நீங்கி), என் பிறப்பு அறும்படியான வழியை (நீ)நினைத்து, இட்டம் உற்று என் மேல் அன்பு வைத்து உன் அடி (உன் திருவடியை) வயலிநகர் முருகனே! போருக்கு உற்ற பன்னிரு கரத்தனே குமரனே! பொருந்திய அட்ட சிட்ட குண (சிட்ட அட்ட குணl) சிரேட்டமான எண் குணத்தனே! குன்றக்குடிக்குத் தலைவனே! (உனது) திருவருள் தந்தருளாதோ!