பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1015

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திஆதிகுத தங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிகு சகனசக சகசகன செகணசெக செகசெகென சங்கச் சகச்சகன செங்கச்செ கச்செகண தனணதன தனதணன. தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா. தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத்திகுகு டனணடன டனடணண டிணினிடிணி டினிடினின டண்டட்ட டட்டடன. டிண்டிட்டி டிட்டிடினி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி யெனதாளந்: தொகுதிவெகு 'முரசுகர டிகைடமரு முழவுதவில் தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கையறை பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை மண்டைத் திரட்பருகு சண்டைத் திரட்கழுகு துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென வந்துற் றிடக்குடர்நி னந்துற் றிசைத்ததிர முதுபேய்கள். சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய் வெங்குக் குடத்தகொடி துங்குக் குகுக்குகென tவடனமிடு திசைபரவி நடனமிட வடலிர திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல் மிண்டைக் குலைத்தமர்செய் தண்டர்க் குரத்தையருள் பெருமாளே (2) முரசு, கரடிகை, டமருகம், முழவு, தவில், தம்பட்டம், மத்தளம், டக்கை (இடக்கை), பறை, பதலை, திமிலை - இவை வாத்திய வகைகள். திமிலை - சல்லரி எனப்படும். கரடிகை - தட்டை எனப்படும் பதலை என்பது ஒரு கட் பகுவாய்ப் பறை, முரசு - துந்துபி எனப்படும். தம்பட்டம் முரசு முழவு எனப் பொருள்படும், இடக்கை ஒருவகைப் பறை (பிங்கலம்) . திருப்புகழ் 404 - அடி 7 - பார்க்க t வடு - வடுத்தல் - வெளிப்படுத்துதல். "வடுத்தெழுகொலை முலை " கல்லா - 5.