பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1056

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம் திருப்புகழ் உரை 583 425 சரியை மார்க்கத்தில் இருப்பவர்க்கும், கிரியை மார்க்கத்தில் இருப்பவர்க்கும், நல்ல எல்லாவித யோகநிலையில் இருப்பவர்க்கும் எட்டுதற்கு அரிதானதும். சமய வேறுபாடுகளால் (வேறுபாடுள்ள சமயங்களால்) நெருங்க முடியாததுமான உண்மைப் பொருளைத் தரவல்ல பராசத்தியினும் மேலதானதும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர் நிலைக்கும் மேம்பட்டதானதும், அற்புதமான பரம ஞானத் தனி ஒளி | பரந்துள்ள சிறந்த இடமாய், நீடியதாய் குற்றமில்லாததான சாயுச்சிய பதவியை, முடிவிலாததும், புகழ்கொண்டதுமான பேரின்ப நிலையைப் பொருந்தி அடைவேனோ! மதில் சூழ்ந்த வயலூர்க்கு உரிய சாமார்த்திய சாலியே! உத்தம புருடன்ே வீரமும் பராக்கிரமமும் கொண்ட சூரன் புரண்டுவிழ வேலாயுதத்தைச் செலுத்திய திருக்கரத்தை யுடைய குமரனே! மேன்மை பொருந்திய திருப்புகழை ஒதுவதற்கு எனக்கு அருள்புரிந்தவனே! கருங் குரங்குக் கூட்டங்கள் பலாப்பழத்தின் மீதிலிருந்து சுளைப்பழங்களைக் கிறிக் கிழித்து உண்டு சண்டையிட்டு வாழைமரங்களிலும் மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டிற் கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (சுக சொரூபத்தை யுற்றடைவேனோ) (முன் பக்கத் தொடர்ச்சி) கதிர்காம மலை மலை உச்சியை அடைவதற்குப் படிகள் கட்டப்படவில்லை. பிள்ளையார்மலை வரை பாதை அவ்வளவு துன்பமாக இல்லை. அதன் பிறகு செங்குத்தாக இருக்கின்றது. மலையுச்சிக் கேறிவிட்டால் இயற்கை எழில் மூலம் முருகன் அழகைக் கண்டு மகிழலாம். (இலங்கைப் புராதன சைவாலயங்கள் - கதிர்காமம் - பக்கம் 19)