பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1081

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை 437. பணிய தானதன தான தந்த, தானதன தான தந்த தானதன தான தந்த தனதான வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள் வேல்விழியி னான்ம யங்கி புவிமீதே. வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல் வேலைசெய்து மால்மி குந்து விரகாகிப்; பாரவச மான வங்க ணிடுபொருள் போன பின்பு பாதகனு மாகி நின்று பதையாமல். * பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை பாதமலர் நாடி யென்று பணிவேனோ, t பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள் பூவையரு ளால்வ ளர்ந்த முருகோனே. #பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்த § பூவைவடி வானு கந்த மருகோனே, ஆரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து துாள்கள்பட நீறு கண்ட வடிவேலா. சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து சோலைமலை மேல மர்ந்த பெருமாளே. (5) o 蟲 o 學_ _ _ 擊 பாகம் - பரிபாகம்; பரிபக்குவம் t பூரணமதான திங்கள் - என்றுந் தேயாது வளராது ஒரு தன்மையாயிருக்குந் திங்கள்; பாடல் 415-கீழ்க்குறிப்பைப் பார்க்க

  1. உலகு அளந்தது - பாடல் 268 கீழ்க்குறிப்பைப் பார்க்க S பூவை வடிவான் - காயாம்பூ வண்ணனாகிய விட்டுணு,