பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1087

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற

  • மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் t யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை

யின்றுதாராய்: # வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாதவூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் S மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி. or மூலவாசல் - பிரமரந்திரம் t யோக பேதவகை எட்டு அட்டாங்க யோகம். அவை தாம் இயமம், நியமம் ஆதனம், பிராணாயாமம், பிரத்தி யாகாராம் தாரணை, தியானம், சமாதி 'இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்கம் ஆவது மாமே"திருமந்திரம்:552 யோகத்திற்கு உரிய அட்டாங்கங்களுள்: இயமம் பொய், கொலை, திருடு, காமம், பொருளாசை - இவற்றினிங்கிப் புலனடக்கி இருத்தல். நியமம்: தவம், தூய்மை தத்துவம் ஒர்தல், மனமுவந்திருத்தல், தெய்வ வழிபாடு என்ற விதி முறைகளில் வழுவா தொழுகல். ஆதனம்: யோக ஆசனங்கள் - பதுமாசனம், சுகாசனம் முதலியன. பிராணாயாமம். இரேசகம், பூரகம், கும்பகம் என்று மூவகையாயச் சுவாசத்தை அடக்கியாளும் யோக முறை. பிரத்தியாகாரம்: இந்திரியங்களை விடயங்களிலிருந்து திருப்புகை பிரபஞ்ச உபாதியைச் சிவச் சொரூபமாகப் பார்த்தல். தாரணை மணத்தை ஒருவழி நிறுத்துகை முழங்கால், குதம், இதயம், கண்டம், கபாலமாகிய தானங்களில் பிரமன் முதலிய பஞ்ச மூர்த்திகளையும் பாவித்தல். தியானம் ஐம்புலத்தையும் அந்தக்கரணத்தையும் அடக்கிச் சிவயோகஞ் சேர்தல். சமாதி: மனத்தைப் பரம்பொருளோடு ஐக்கியப் படுத்தி நிறுத்துகை (அடுத்த பக்கம் பார்க்க)