திருச்செந்து) திருப்புகழ் உரை 93 32 மனம் செல்வதற்குப் பங்கு (எடுத்துக்கொள்வன) எனத் தங்கியுள்ள ஐம்புலத்தொடு (சம்பந்தப்பட்ட) என்னுடைய குணமும், ஐம்பொ றிகளின் கட்டும் (பிணிப்பும்) சிதறிப் போகக் காலன் - மலர்போலும் (தன்) சிவந்த கண்கள் நெருப்பு மிக்கு எழும் வலிமையுடன் தண்டாயுதத்தை எடுத்து அண்டம் கிழியும் படி (தோன்றி) இங்கு (என்னிடம்) வர, (என்னுடன்) தங்கும் பல சுற்றத்தினரும், (இது) எனக்கு என்றும், இங்கு உனக்கு (அது) என்றும் (பாகப் பொருளைப்பற்றிச் சண்டை எழ), அப்போது சுற்றத்தாரிடம் கணக்கு (கணக்கு) என்று பலமுறை கூறி இளைத்து (செய்த பாகக் கணக்கின் காரணமாக உறவினர்களின்) அன்பையும் கெடுத்து, என் உடல் அழிந் து ஒழிக்கப்படுவதற்கு முன்னே, புகழப்படும் செந்தமிழ் கொண்டு ஆங்கு (பொருள் உள்ளவரிடம்) இரக்கின்ற இழிதொழிற் குற்றம் நீங்க, (என்) துன்பத்தை ஒழித்து இன்பத்தைத் தந்தருளுக; ஒலிக்கின்ற குளிர்ந்த கடலிற் சங்கை (பாஞ்சசன்னியம் என்னும் சங்கை)த் (திருக்)கரத்தில் தரித்து, (உலகு) எங்கும் இடர்கள் ஒழிய, அறிதுயில் கொள்ளும் திருமாலும், (அவர் உந்தித் தாமரையில்) தோன்றிய (பிரமனும்) (தமது) பெருமை எல்லாம் குலையச் சந்தப் பாடலுக்கு (அல்லது சந்ததமும் எப்போதும்)மகிழ்ச்சி கொண்டிருக்கும் சிவ பிராற்கும் செம்பொருளை (மூலப் பொருளை) ஈந்தவனே! (உபதேசித்தவனே)
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/109
Appearance