பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1096

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 623 பாரதத்தை மேருமலையின் வெளிப்புறத்தில் விளங்கும். படி, தமது தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் வரைந்தவரும், பானுவின் நிறம் (சூரியனைப் போன்ற சிவந்த நிறத்தைக்) கொண்டவரும், கணேசரும், கு ஆகுவாகனர்) - (சிறுமையைக் காட்டும்) பெருச்சாளி வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்கு இளையவனே! பாடல்கள் சிறப்புடனும் அழகுடனும் உள்ள தமிழைத் தமிழ்க் கடவுளாய் நின்று பெரியராம் அகத்திய முநிவருக்குக் காதில் நன்கு உபதேசம் செய்த குமரேசனே! போரில் மிக்கவனான சூரன் விடுவதில்லை விடுவதில்லை என்று நேராக வந்து எதிர்க்க வேலாயுதம் படீர் படீர் என்னும் ஒலியுடன் அல்லது வேலை - கடல் படீர் படீரென்னும்படி அவ்வசுரர்களைப் போயறுத்தபோது குபிர் குபிர் என நிரம்பரத்தம் பூமியிற் சிந்த (அவ்வேலை வீசின. குகனே! குகனே! விளங்கும் சோலைமலையில் வீற்றிருக்கும் தேவே! தெய்வ யானையின் தோளைப் பூண்ட (அணைந்த) அன்புகொண்ட புயம் ஆறு புயம் ஆறு (பன்னிரு புயங்களைக்) கொண்ட பெருமாளே! (வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே) (முன் பக்கத் தொடர்ச்சி) $ முருகவேள் அகத்தியருக்குத் தமிழ் போதித்தது. அகத்தியர் சிவபிரானை வணங்கி யாரு மகிழ்ச்சி திளைக்கும் செந்தமிழ் என்னும் திருத்தகு மொழி தந்தருள்" என வேண்ட அவர் தணிகை முருகனை அண்மிப் பரவுக என்றார்.அங்ங்ணமே, அகத்தியர் தணிகையில் முருக. வேளைப் பூசித்துத் தமிழ் ஞானம் பெற்றனர் என்ப. "அறுமுகக் கடவுள் அன்னான் தன்னை நற்றமிழின் பாடை தனக்கு முன் குரவனாக்கி " - என்பது தணிகைப் புராணம் - திருப்புகழ் 49 - பார்க்க 曹實 உக்க - சிந்த tt தொள். தோள்.