பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1099

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை முடுகு விர * சூர பத்மர் தலையின் முளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த t மயில்வீரா. முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாம லைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. (10) 443. பெண் மாயை அற தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தனதான பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள் நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் பாரப் பூதர மொத்தத னத்திகள் மிகவேதான். பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள் சிவிக் கோதிமு டித்தள கத்திகள் பார்வைக் கேமயலைத்தரு துட்டிக ளொழியாத மாசுற் றேறிய பித்தளை யிற்பணி நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள் அதிமோக † சூரபத்மர் - சூரன், பதுமன், சிங்கமுகன், தாரகன் என்னும் நான்கு யூதர்கள் கருடனாதிய ஊர்திகளுக்கு இடையூறு செய்தமையால் முருகவேளால் அசுரர்களாமாறு சபிக்கப் பெற்றனர். சாபம் நீங்கப் பெறும். போது அவரவர்கள் விரும்பியவாறு சிங்கமுகன் துர்க்கைக்குச் சிங்கவாகனமாயினன், தாரகன் ஐயனாருக்கு யானை வாகனமாயினன், சூரன் கந்த வேளுக்கு மயில்வாகனமானான், பதுமன் அவருக்குச் சேவற் கொடி. யானான். "இருவிர் ஒருவடி வாகி நிருதளிற் சூரபத்மாவென் (று) றல்கூர் பெயர்தரித் திமையோர்க் குறுபகையா யுடற்றிடுநாள் (அடுத்த பக்கம் பார்க்க) 35