பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை • 95 தினை (விளையும்) மலையில் (வள்ளி மலையில்) தங்கியிருந்த சிறிய பெண்ணாம் வள்ளியின் குங்குமங் கொண்டுள்ள குடம் போன்ற கொங்கையை அழகிய செம்பொன் போன்ற திருப்புயங்களில் என்றும் புனைந்தருள்பவனே! செழித்துள்ள ஆழ்ந்த நீர்நிலை (கடல்) சங்கங்களைக் கொழிக்கும் சந்தனப் பசுஞ்சோலை சூழ்ந்த குளிர்ந்த திருச்செந்துளரில் தங்கும் பெருமாளே! (துன்பங் கழித்து இன்பம் தருவாயே) பருத்த (யானைத்) தந்தத்தைப்போல இருந்து அணிந்துள்ள கச்சை அடர்த்துத் தள்ளிப் பருத்து எழும் பொன்னொளி கொண்ட மலைபோலுள்ள கொங்கைகளை உடைய மாதர்கள் - கொண்டுள்ளதாய், பொல்லாததாய், சரத் துக்கு (அம்புக்கு) ஒத்ததாய் விளங்கி, அங்கு நீலோற்பல மலரின் அழகையும் ஒட்டுவித்துச் சக்கரப்படை போலவும் சத்திவேல் போலவும் - வேகங்கொண்ட செவ்விய கடைக்கண்களில் (மயக்கம்) பொருந்திப் பேரன்புகொண்டு, இளைத்து, அங்கு அழிபடும் புத்தியின் (நேர்மையைச்) சந்தேகித்து (உண்மையை) அறியாத என்னை -