பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலை) திருப் புகழ் உரை 637 விரைந்து வரும்படி முதலையை வரவழைத்துச் சூழ்ந்து நின்ற அடியார்கள் தொழ (முதலை உண்ட) பிள்ளையை அழைப்பித்துக் கூட்டி (அந்தப் பிள்ளையின் பெற்றோர். களிடம் சேர்ப்பிக்க விண்ணப்பஞ் செய்த ("பிள்ளை தரச்சொல்லு காலனையே" - என்று முறையிட்ட சுந்தரர் பாடின) தமிழினை (அன்புப்) பெருக்குடன் கேட்ட பழைய நீதிமான் பழையதும் மதம்பாயும் இடமாம் முகத்தையும், தந்தத்தையும் கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்தவர், வேத மொழிகளைக் கூறும் பரமர், கங்கையைச் சடையிற் சூடியுள்ள பரமேசர். (635 ஆம் பக்க தொடர்ச்சி) S குகைபடு திருப்பொற்கோட்டு முனி. பொன்மலையை முனிந்தவனே (முனி - முனிந்தவனே, கோபித்தவனே) பொன்மலை - மேரு எனக் கொண்டால் - இது மேருவைச் செண்டால் அடித்த திருவிளையாடலைக் குறிக்கும் - (பாட்டு 2 கீழ்க்குறிப்பு); பொன்மலை - கிரெளஞ்சம் - குருகு பெயர் பெற்ற கன வடசிகளி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும்" - வேடிச்சி காவலன் வகுப்பு, (கணம் - பொன்) பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன் - கந்தர் அலங்காரம் 89. கனகிரெளஞ்சத்திற் சத்தியை விட்டு - திருப்புகழ் 454, இனி, முனி என்பதற்கு முனியே - பெரியோய் - தவத்தோய் என்றும் பொருள் காணலாம். - முனியே நான்முகனே முக்கணப்பா" திருவாய்மொழி 10-10-1. "ஆட்கொள்ளும் முனிதனை" சம்பந்தர் II-143; "முனிதான் உமையொடு முயங்கி" - சம்ப்ந்தர் 134.5 முருகன் தனிவேல் முனி" கந்தர் அநுபூதி - 13. இந்தப் பொருளில் திருப்பொற்கோட்டு முனி என்றால் அழகிய கனககிரிப் பெரியாய்" எனப் பொருள்படும். (கனககிரி) பாடல் 400. இனி, பொற்கோட்டு முனியை நாடா எனக் கொண்டு சிவனை நாடி' - எனப் பொருள் காண்பர் அன்பர் - அருட்கவி சேதுராமன்; இப்பொருளில் பொன்கோடு என்பது கயிலை. கயிலையைப் பொன் நொடித்தான் மலை’ என்பர் சுந்தரர் (7-100-10); செம்பொற் கயிலாயமலை - சம்பந்தர் -11-15.5.