பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை திருப்புகழ் உரை 641 விளங்கும் உனது புகழைக் கற்று, (அப் புகழ்ச்) சொற்களை நிரம்பக் கூறிப் (போற்றி செய்து), (உனது) திருவடியைப் பற்றித் தொழுது ஒழுகிப், பிறப்பை நான் அறுக்கும் வண்ணம் மேலான முத்தி யின்பத்தைப் பெற அருள் பாலிப்பாயாக. சேணம் கட்டி, அங்கவடியிட்டு, குதிரைகளைச் செலுத்தியும், துதிக்கை கொண்ட கொடிய மலைகளை (யான்ைகளை) வேகமாக நடத்தியும், திடீரென்று நெருங்கி வந்து சண்டையிட்ட சூரனுடைய - பெரிய படை அழிந்து நிலைகுலையவும், சூரனும் அலை கடலுக்குள் ஒடிப் புகும்படி அவனை மோதியும், களிப்பு (மகிழ்ச்சி) கொண்ட மயிலை (இந்திரனாகிய மயிலை) அழகுடன் நடத்திச் சண்டையிட்ட தலைவனே! (குலிசாயுதங்கொண்ட) இந்திரன் மகள் தேவசேனைக்குத் தெரியாமல் தேவசேனையை விட்டு விலகிச்) சென்று, குறவர் மகள் வள்ளிமீது சித்தத்தை வைத்து (வள்ளியை நாடிச்சென்று குளிர்ந்த தினைகள் மிகவும் பரவியுள்ள தினைப் புனத்தில் திரிந்தவனே! பொல்லாத கிரவுஞ்ச கிரியை (வேலாற்) குத்தி முறித்துப் போர் புரிந்து, மேம்பட்ட் உனது நிலையை விளக்கிச் சோலை மலையிற் புகுந்து வீற்றிருக்கும் உக்ரப் பெருமாளே! (பரமுத்திக் கருள்தாராய்) (முன் பக்கத் தொடர்ச்சி) # குறட்கு நீரருத்தி வைகைக் குடிஞையா யொழுகு கங்கை அறற் குழல். மறக்கயல் நெடுங்கணானை வஞ்சித்து . புறப்படுவாரைப் போலப் போதுவான் போத மூர்த்தி" - திருவிளை - மண்சுமந்: சிவபிரானும் கங்கையை வஞ்சித்துச் சென்றமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. S குருகிரி" என்றும் பாடம் - குருகிரி (சுவாமிமலை)