பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 643 448 மலரணை அசைந்து கலைய, மேகம் போன்ற (கரிய) கூந்தலின் முடி சரிந்து விழ, மிக்க நறிய மணங்கள் வேர்வையுடனே. ஒன் والالك or இடம் (விசாலமான) கண்கள் அசைய பிறைபோலும் நெற்றி புரண்டு கலங்க, அலங்காரமாய் அணிந்த ஆடை நெகிழ்ந்து போக, இளநீர் போன்ற கொங்கைகள் இரண்டும் அசைய நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டம் கொள்ள, முகம் முகத்தோடு பொருந்த படுக்கை அணையிலே. பெரிய மோகச் செயலிற் கலந்து முழுகி (நான்) களி கூர்ந்திருந்தாலும், மாலைகள் அசையும் சிரம் முதலான உனது வடிவத்தையும், அழகிய திருக்கரத்தில் உள்ள வேலாயுதத் தையும் மறக்கமாட்டேன். வில்போன்ற நெற்றியை உடைய இளம்பெண், மோகி, தருபவள்), அழகிய சடையினள், எந்தை (சிவனுடைய) பாதியில் (இடதுபாதியில்) விளங்கும் மரகதம் போல் பச்சை நிறத்து அழகிய உருவினளாம் உமையின் பாலனே! புன்னகை செய்து, சூரனும், மலையும், கடலும் எரிந்து போக, விளங்குகின்ற வேலை எறிந்த ஞான முருகனே! கொலைத் தொழிலே பயின்றிருந்த வேடர்களின் மகள் வள்ளி மணந்த தோளினே! நற்குணனே! அலர் கடம்ப மாலை (கடம்பு அலர்மாலை) . கடப்பமலர் மாலை அணிந்த மார்பனே! (அல்லது - குணம் - (நிறம் உள்ள) அலர்மாலை மலர்மாலை, கடப்பமாலை இவைகளை அணிந்த மார்பனே!) கொடி மினல் (மினல்கொடி) . மின்னற்கொடி போன்ற சோதியே! இளங்கதிர் விளங்கும் ஞானனே! குலகிரி (சோலைமலை) யில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே! (வடிவொடங்கை வேலும் மறவேனே) இடங்கண் ஆட இடது கண் ஆடுதல் - பெண்டிர்க்கு நலம் பயக்கும் என்ப.