பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதிருப்பதி திருப்புகழ் உரை 647 சிறந்த பிரமன் அறியமாட்டாத ஒப்பற்ற சிவனுக்கு (அல்லது - சிரசை அயன் அன்னமாய்ப் பறந்தும் காண முடியாத ஒப்பற்ற சிவனுக்கு)க் குருபரனே! என்று பூமியில் உள்ள அடியார் கூட்டம் நினை (நினைக்கின்ற - தியானிக் கின்ற) வாகா (அழகனே). சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும் ஆறு திருநகர்த் தானங்களில் (ஆறுபடைவீடு எனப்படும் தலங்களில்) வீற்றிருக்கும் பெருமாளே! பெரிய மயில்மேல் ஏறிய பெருமாளே! (கழலிணை பெறவே இனி யருள்வாயே) 450 இழிவு மிகுந்துள்ள பிறப்பு அணுகாத வண்ணம் நானும் உனக்கு அடிமையாம் வகைக்கு (அடிமையாகும் திறத்தைப் பெற) ஞானம்' என்கின்ற பிரசாத அருளைப் பாலித்து என்னுடைய வினைகள் ஒழிய நாணம் (என்னும் கட்டை - விலங்கை) விலக்கும் உனது கருணையைத் தந்தருளுக. (முன் பக்கத் தொடர்1ச்சி) அகற்றிய - அகற்றுகின்ற (விலக்கும்); இறந்த காலம், நிகழ்காலப் பொருளில் வந்துள்ளது. பவங்கள் (தொலைந்த) தொலைத்த வடிவேலா - பாடல் 367, அன்பர் பங்காகி நின்ற குமரேசா - பாடல் 369-என்புழிப்போல்;