பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறைக்குப் பாராட்டு

கி.வா. ஜகந்நாதன்


மன்னிய அருளும் ஞானமும் அழகும்
    வடிவென வளர்திருக் குமரன்
தன்னியல் புணர்ந்து சந்ததம் அவன்றன்
    சரணதா மரைகளில் மனத்தைத்
துன்னிய தேனின் சுவைநுகர் வண்டாத்
    துளங்கரும் பக்தியிற் சிறந்து
மின்னுற வைத்த செங்கல்வ ராய
    வித்தக மற்றிது கேண்மோ. (1)

வருமுறை யறிந்து தமிழியல் போதி
  மாட்சிசால் புலமையில் வீறும்
திருவினர் போலா தருளினில் விஞ்சிச்
  சிவபரஞ் சுடரொளி தரவே
மருவிய போதச் செருக்கினில் தமிழ்ப்பா
  வாரியை வழங்கினார் மூவர்
உருவொளிர் பிறரும் அருளினர் ஈரா
  றெனத்திரு முறைகளாய் உயர்ந்த (2)

அத்தகு மரபை நன்கினி தாய்ந்தே
  அழகனெம் ஆண்டவன் முருகன்
பத்தியிற் சிறந்தோர் அன்பினிற் பாடும்
  பனுவலைத் திருமுறை யாக
வைத்துணர் வுறவே வகுப்பதற் கெண்ணி
  மதிநிறை யாற்றலால் முயற்சி
ஒத்துறப் புரிதல் ஒர்ந்தனை ஐய
  உனக்கமை திறத்தொடும் சாலும். (3)
  
பன்னிரு விழிமா மலரினன். ஈயப்
  பன்னிரு திருக்கரங் கொண்டான்
தன்னிரு வனச மலரடி பதித்த
  சால்புறு நெஞ்சினை நினக்குப்