பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 117 43 கொடிய நஞ்ச, அம்பு, சேல்மீன். நிகர்க்கும் கண்; பால், மென்மையான பாகு வெல்லம், (போன்ற) அழகிய சொற்கள் குயிலை (நிகர்க்கும்); இருளை (நிகர்க்கும்) மெல்லிய கூந்தல்தான் என்று (இவ்வகையாகக்) கொண்டுள்ள (பொது மாதர்களின்) மெல்லிய தோளைக் கூடுவதற்காகப் பொருள் தேட வேண்டி, வங்காளம், சோனகம், சீனம் எனப்படும் நாடுகளுக்குப் போய்க் கொடிய துன்பங்கள் படலாமோ ! வலிமை மிக்க தோள்களைக் கொண்ட குமரனே! அழகனே! வந்து இப்போதே ஆண்டருளுவாயாக - பூந்தாதுக்களில் உள்ள (அல்லது வாசனை மிக்க) பசிய தேனை உண்டே வண்டுகள் நிரம்பும் குன்றத்தாளாகிய (வள்ளி மலைக்கு உரியளாகிய) வள்ளியின் கொங்கைக்கு இனியவனே!

  • (ஏழு) மலைகளும், சூழ்ந்துள்ள கடல் ஏழும், சூரனும்பட்டு

அழியப் பொருத கோபங் கொண்டவனே! எலும்பு மாலைபூண்ட தோளினரது (வன்மையுடையவரது) அன்பு நிறைந்த குழந்தையே! தேவர்தம் ஒப்பற்ற தலைவனே! சங்குகள் தவழும் கடல் தெற்கே இருக்க வந்து அமர்ந்தவனே! கந்தசுவாமியே! திருச்செந்துார்ப் பெருமாளே! (வந்தே இந்தப் பொழுது ஆள்வாய்) "σφ குன்றோடும், ஏழு அம்போடும் (கடலோடும்) எனக் கொள்ள வேண்டும் - m குன்று. கிரெளஞ்சம் அல்ல; சூரனுக்கு அரணாயிருந்த ஏழு மலைகள். 'அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்". பக்கம் 163 பார்க்க, தக்கயாகப் பரணி 5,170, தாழிசை உரைப் பகுதி பார்க்க